கடைசி கால வித்தின் அடையாளம் Tifton, Georgia, USA 62-0319 1மாலை வணக்கம் நண்பர்களே, இன்றிரவு டிஃப்டனில் இருப்பது ஒரு சிலாக்கியமே. இது எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யமானதாகும். சில காலத்திற்கு முன்பு நமது நல்ல நண்பர் சகோ. வெல்ஷ் ஈவான்ஸ் அவர்களிடம், நான் சற்று களைப்படைந்திருந்த போது கூறியதாவது: நான் டிஃப்டனுக்கு மீன் பிடிப்பதற்காக வரப் போகிறேன். நான் அங்கு வரும்போது அங்கு எங்காவது நான் உங்களை சந்திப்பேன், “அப்போது நாம் ஒரு வீட்டு ஜெபக் கூட்டம் ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணுகிறேன்'' என்று கூறினேன். இங்கே இன்றிரவில் நான் என்னை ஒரு பள்ளிக்கூட அரங்கத்தில் இருக்கக் காண்கிறேன். அதிகமாக பேசியதால் தொண்டை கட்டிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம் ஒரு சிறிய பிரசங்கத்தை, வெறும் ஆறு மணி நேர அளவிற்கு என்னால் முடிந்த அளவு பிரசங்கித்தேன். இப்பொழுது நான் உங்களை பயமுறுத்தவில்லை. அந்த அளவு இன்றிரவு நான் நேரத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். அதைப் பற்றி நான் அப்படியாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால் தொண்டை கட்டிவிட்டதால், இங்கு விஜயம் செய்திருக்கிறபடியால்... 2இந்த அருமையான மேய்ப்பர் என்னைப் பற்றி ஒரு மேலான அறிமுகத்தை செய்து வைத்தார், இந்த அருமையான மேய்ப்பரை சந்திக்கவும், இங்கு இருக்க முடிந்ததற்காகவும், ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் ஜனங்களை சந்திப்பதற்காக மகிழ்ச்சியடைகிறோம். மேலும், இந்த சகோதரர் கூறினவைகள் முழுவதும் உண்மையாயிருக்கிறது. அதற்கு நாங்கள் “ஆமென்'' என்று கூறமுடியும். ஏனெனில் இந்த கடைசி நாட்களில் பிசாசானவன், தன்னுடைய நேரம் முடியப் போகிறது என்று அறிந்தவனாய், காண்கிற எவரையும் விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். (வெளி. 12:12; 1பேதுரு 5:8). இந்த சிறிய அரங்கின் அமைப்பை நான் விரும்புகிறேன். இப்பள்ளிக்கூட மன்றக் குழுவினருக்கும், பள்ளி முதல்வருக்கும் இவ்வரங்கை உபயோகித்துக் கொள்ள அனுமதித்த ஏனையோருக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். குறுகிய கால அவகாசத்தில் ஏற்படுத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அருமையான மக்களாகிய உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நான் வரும்போது இங்கு தெருவில் விரிக்கப்பட்டிருந்த வரவேற்பு கம்பளத்தை கவனித்தேன், யாரோ அதை செய்திருக்கிறார், அது மிகவும் அருமையாக இருந்தது. சகோ. வில்லி என்பவர் தான் அதைச் செய்திருப்பார் என்று எண்ணுகிறேன், நான் அதை மெச்சுகிறேன். 3கர்த்தருக்குச் சித்தமானால், நான் விரும்புவது என்னவெனில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில், நாம் இந்த மேய்ப்பரோடும், ஏனையோரோடும், யாவரும் கூடி வந்திருந்து, சில ஆராதனைகளை, நான்கு அல்லது ஐந்து நாட்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அதற்காக போதுமான அளவு விளம்பரம் செய்து, எல்லா சபைகளையும் கூடி வரச் செய்து இருக்கலாம்; ஏனெனில், உலக வரலாற்றிலேயே, முன் எப்பொழுதைக் காட்டிலும், இப்போதுதான், நாம் ஒருவருக்கொருவர் தேவையுள்ளவர்களாக இருக்கிறோம்; உண்மையான ராஜரிக விசுவாசிகள் யாவரும் நாம் ஒருவருக்கொருவர் கூடி வருவது அவசியமாயிருக்கிறது. எனவே நானும்... எங்கிலும் சென்று தேவ ஜனங்களை சந்திப்பது எப்போதும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது; எங்கிலும் அது ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது. 4இங்கே நம்மிடையே சில இளைஞர்கள் உள்ளதை நான் காண்கிறேன். சற்று நேரத்திற்கு முன்பாக முன்வரிசை இருக்கையில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் அமர்ந்திருந்ததைக் கண்டேன். அவர்களிருவரும் மிகவும் அழகான சிறுபிள்ளைகள், மிகவும் அருமையாக அங்கே அமர்ந்திருந்தார்கள். நான் அதை நேசிக்கிறேன். பிள்ளைகளைப் பொருத்தமட்டில்... இனிமையான, கபடமில்லாத பச்சிளம் பாலகர்களைப் பற்றி ஒரு விசேஷம் உண்டு. நான் அவர்களை விரும்புகிறேன். இன்றிரவில் இங்கே நீங்கள் வந்திருப்பதற்காக நான் நன்றி கூறுகிறேன். இப்பொழுது, இன்றிரவில், கர்த்தருடைய வார்த்தையாகிய விதையை விதைப்பதில் நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்வது அருமையாக இருக்கும் என்று நான் எண்ணினேன். “வார்த்தையின் மூல வித்து” என்பதைப் பற்றிய பொருளின் பேரில், நான் நேற்றிரவில் ஆறுமணி நேரம் பிரசங்கித்தேன். நாம் அதை ஆதியாகமம் முதற்கு, வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் அங்குமிங்குமாக ஆராய்ந்தோம். அது ஆறுமணி நேர ஒலிநாடாவாகும். தேவனுடைய திட்டம் அவ்வாறு தான் இருக்கிறது; அவர் என்னவாக இருக்கிறார்; எப்படி உரைக்கப்பட்ட வார்த்தையே தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது என்பவைகளையெல்லாம் பார்த்தோம். லூக்கா சுவிசேஷத்தில், வேதாகமம் கூறுவதென்னவெனில் விதைக்கிறவன் விதைத்த விதையானது தேவனுடைய வார்த்தையேயாகும் என்று. 5இப்பொழுது விதைக்கப்பட்ட எந்தவொரு வார்த்தையும், அது தன் பயிரை முளைப்பிக்க வேண்டி, முன்னதாக அதற்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால் தண்ணீரானது நிலத்தில் விழுந்தால், அது எத்தகைய விதை நிலத்தில் விதைக்கப்பட்டிருந்தாலும், அதினதின் வித்து அதினதின் கனியைப் பிறப்பிக்கும். ஏனெனில் தேவன் ஆதியாகமம் 1:11 - இல், ''...தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார். அதாவது ஒவ்வொன்றும்... எபிரேயர் 6ம் அதிகாரத்தின்படி தண்ணீரானது பூமியின் மேல் விழும் போது, மழையானது பூமியின் மேல் அடிக்கடி பெய்து முளைக்கச் செய்து தன் கனியைக் கொண்டு வரும்படி செய்கிறது. ஆனால் முள்செடிகளையும், முள்பூண்டுகளையும், அதே தண்ணீரானது பூமியிலிருந்து முளைப்பிக்கச் செய்கிறது. ஆனால் அவைகளுடைய கனிகளின் மூலமாக உங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆகவே கிறிஸ்தவர்கள், பரிசுத்த ஆவியின் கனிகளின் வாயிலாக அறிந்து கொள்ளப்படுகிறார்கள். ஒரு கிறிஸ்தவனின் ஜீவியத்தை அதுதான் ஆண்டு கொள்கிறது. அவன் எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், பரிசுத்தஆவிக்குள் பொறுமை இவைகளை உடையதாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மூலமாக இக்கனிகள் வெளிப்படுகின்றன. (கலா. 5:22). 6இப்பொழுது நேற்று நாம் பார்த்தோம், விதைக்கப்பட்ட அவ்விதையானது முரண்பாட்டின் விதையாக இருந்தது என்று. சாத்தான் ஏவாளிடம் ஒரு பொய்யைக் கூறியபோது, முரண்பாட்டின் விதையையே விதைத்தான். தேவனால் உரைக்கப்பட்ட ஒரு வார்த்தையை அவிசுவாசித்தலே, உண்டான மரணம் அனைத்துக்கும், வியாதி அனைத்துக்கும், ஏனைய எல்லா தொல்லைகளுக்கும் காரணமாக அமைந்தது என்று பார்த்தோம். ஒரேயொரு வார்த்தையை அவிசுவாசித்தல்... அவள் அதை அப்படியே விசுவாசிக்கவில்லை. அவள் அதனோடு ஒன்றைக் கலப்படம் செய்ய முயற்சித்தாள், எதையும் தேவ வார்த்தையோடு கலப்படம் செய்ய முடியாது. வார்த்தை வார்த்தையாக மட்டுமே இருக்கவேண்டும், ஏனெனில் அதுதான் மூல வித்தாகும். தேவன் நித்தியமானவராக இருக்கிறார். தேவன் வார்த்தையாக இருக்கிறார். ''ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தார்...'' (யோ. 11) “...அந்த வார்த்தை மாமிசமாகி நம் மத்தியில்...'' (யோ. 1:14). 7இப்பொழுது தேவனும் அவரது வார்த்தையும் ஒருவர்தான். அதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஒரு நாளிலே, தேவன் உலகத்தை நியாயந் தீர்ப்பார். காங்கிரசில் (அமெரிக்க பாராளுமன்றம் - தமிழாக்கியோன்) இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலமாக நியாயந்தீர்க்க மாட்டார்; அல்லது ஒரு சபையின் நடவடிக்கைகளினாலோ நியாயந்தீர்க்க மாட்டார். ஆனால் அவர் தமது வார்த்தையினால் உலகை நியாயந்தீர்ப்பார். நாம் ஸ்தாபனமான சபைகளைப் பற்றி எடுத்துக் கொண்டால், அவர்களில் எந்த ஒன்று சரியானது? அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் முரண்பட்டிருக்கின்றனர். கத்தோலிக்கர் ப்ராடெஸ்டெண்டுகளினின்றும் ப்ராடெஸ்டெண்டுகள் வைதீக சபையினின்றும் வேறுபட்டிருக்கின்றனர். ஏன், நாம் ஒவ்வொருவருமே வேறுபட்டிருக்கிறோம். ஆகவே இவர்களில் எந்த ஒருவர் சரியாக இருக்கமுடியும்? நாம் நமது சிந்தையில் தொடர்ச்சியாக குழப்பத்தை உடையவர்களாகவே இருப்போம். ஒரு நபர் செய்வதறியாது திகைப்பார். நீதியுள்ள தேவனோ, பூமியனைத்தின் மேலும் நியாயாதிபதியாக இருப்பவர், நிச்சயமாகவே, நியாயந்தீர்க்கப்பட ஒன்றை நமக்குக் கொடுப்பார். 8''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' (மத்தேயு 25:35) என்று நான் வேதாகமத்தில் இப்பொழுது வாசிக்கிறேன். வார்த்தையிலிருந்து ஒருவன் எதையாகிலும் எடுத்துப் போட்டாலோ அல்லது அதனோடு எதையாவது கூட்டினாலோ, ஜீவப் புத்தகத்திலிருந்து அவனது பங்கு எடுத்துப் போடப்படும் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளதை நான் வாசிக்கிறேன். அது எழுதப்பட்டவாறே இருக்கிறது. அநேகர் அது திருத்தப்பட்டுள்ளது, மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூற முயலுகின்றனர். அவர்கள் கூறுவதை நான் நம்பவில்லை. உலகையோ அல்லது சபையையோ தேவன் நியாயத்தீர்ப்பதற்கு தேவனுக்கு ஒரு அடிப்படை நியதி இருந்தாக வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதற்கு ஒரு அடிப்படை நியதி இருந்தாக வேண்டும். அது சபை ஸ்தாபனமாக இருக்க முடியாது. ஏனெனில் அவைகள் ஒன்றோடொன்று வேறுபட்டிருக்கின்றன. என்ன செய்ய வேண்டுமென்பதை யார் அறிவார்? ஆனால் ஒரு அடிப்படை நியதி ஒன்றுண்டு, அதுதான் அவருடைய வார்த்தையாகும். தேவன் தமது வார்த்தையின் பேரில் கண்காணிப்பாயிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். வேதாகமமாகிய வார்த்தையானது தேவன் விரும்புகிற படியே அதற்கு புள்ளிகள், நிறுத்தக்குறிகளிடப்பட்டுள்ளது, அதற்கு முறையான விதமாக அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்டுள்ளது. அது மக்களுக்கு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அக்காரணத்தினால் தான் நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். அவ்வார்த்தையானது ஒருவித்தாக இருக்கிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன். வித்தானது சரியான நிலத்தில் விதைக்கப்பட்டு, பரிசுத்தாவியினால் நீர்ப் பாய்ச்சப்பட்டு இருந்தால், அது சரியான அதன் கனியைக் கொடுக்கும். தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் எதையும் நிறைவேற்றுவார். 9தேவன் ஒரு மனிதனை குணமாக்கும்போது... இங்கே சில நாட்களுக்கு முன்பாக எங்களது சபையில், ஒரு ஞாயிறன்று நான் பிரசங்கிக்கப் போவதாக அறிவிப்பு செய்திருந்தேன். அது கடந்த வாரத்தில் போன ஞாயிறன்று. ஸ்ட்ரெச்சரில் வைத்து ஒரு சிறுமியை அவர்கள் அங்கே கொண்டு வந்தனர். இரவில் சாலையில் என்னை அழைத்து அவர்கள், “அச்சிறுமி உயிர் வாழ முடியாது'' என்று கூறினர். ஏனெனில் அப்பெண்ணுக்கு புற்றுநோய் மோசமான அளவுக்கு முற்றிப் போய்விட்டது. அவள் பதினேழு வயது மதிக்கத்தக்கவளாயிருந்தாள். அவளால் அங்கு வரக்கூட முடியாது. அங்கு வந்து சேரும் முன்னரே அவள் மரித்துவிடுவாள் என்று கூறப்பட்டது. பதினேழு வயதுடைய அவ்விளம் பெண்ணின் நிலைமை பரிதாபமாக இருந்தது. எனது சபைக்கு ஒன்றை நிரூபிக்கும்படி நான் அப்பெண்ணை தொடவும் கூட செய்யவில்லை. அவளைத் தொடவேயில்லை. நான் உள்ளே பிரவேசித்தேன். அவள் ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்தாள். அங்கே வேறுபல நோயாளிகளும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் நானோ அவ்விளம் பெண்ணின்மேல் அக்கறை கொண்டவனாய், அவளுடைய ஆவியை தொடர்பு கொண்டு, அவளோடு பேசினேன். அவள் மிகவும் அருமையான ஒரு பெண்ணாக இருந்தாள். அப்பெண் அகால மரணம் அடைய ஒரு காரணத்தையும் நான் காணவில்லை. அவளுடைய ஜீவனை எடுக்க முயற்சித்தது ஒரு பிசாசாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே நான் அப்பெண்ணை தொடவேயில்லை; வார்த்தையோடு நேராக பிரசங்க பீடத்தை நோக்கிச் சென்று, வார்த்தை பிரசங்கித்தலில் ஈடுபட்டிருந்தேன். வார்த்தையே அவளை உடனடியாக குணமாக்கியது, அதனால் அவள் அப்போதே எழுந்து நடந்து சென்றாள், இப்போது நலமுடன் இருக்கிறாள், மற்ற எவரையும் போல சுகமாயிருக்கிறாள், அவ்வியாதியின் எவ்வித தடையத்தையும் அவளிடம் காணவில்லை. அவளைத் தொடக்கூட செய்யவில்லை. பாருங்கள், வார்த்தை புறப்பட்டுச் சென்றபோது, அவள் வார்த்தையை விசுவாசித்தாள். வார்த்தையானது தேவனுடைய ஜீவனாயுள்ளது, தேவனுடைய வல்லமையாக இருக்கிறது. வார்த்தையே கிரியை செய்கிறது, வார்த்தையே சுகமளிக்கிறது. 10“நல்லது, இயேசு வியாதியஸ்தரை குணமாக்கினார்'' என்று அப்போது நீங்கள் கூறுவீர்கள். அவரே வார்த்தையாக இருக்கிறார். அவரே வார்த்தையாக இருக்கிறார். நீங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது, இயேசுவையே ஏற்றுக் கொள்ளுகிறீர்கள். ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். ''வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார்'' (யோ.1:14). நாம் அதை விசுவாசிக்கிறோம், அதன் ஒவ்வொரு சிறுபாகத்தையும் கூட நாம் விசுவாசிக்கவில்லையா? கிறிஸ்துவானவர், காணும்படியாக தோற்றமளித்த தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவருடைய மணவாட்டியும் அவ்வாறே இருக்கிறாள் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். வார்த்தை முழுவதையும் அவள் விசுவாசித்தாக வேண்டும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். அவள் தன்னில் வார்த்தையை உடையவளாய் இருத்தல் வேண்டும்; ஏனெனில் அவள் தான் அவருடைய சரீரத்தின் பாகமாயிருக்கிறாள். அவள்தான் சரீரமாயிருக்கிறாள். அவர் அச்சரீரத்தின் தலையாயிருக்கிறார். அவர் மரித்த போது, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், மகத்துவமுள்ள தேவனுடைய வலது பாரிசத்திலே உன்னதத்தில் வீற்றிருக்கிறார், அப்படியாயின் நாம் அவருடைய பிரதிநிதிகளாயிருக்கிறோம். நாம் நம்மை மரித்து, ஞானஸ்நானத்தில் அடக்கம் பண்ணப்பட்டு, அவரோடு உயிர்த்தெழுந்து, உன்னதங்களிலே கிறிஸ்து இயேசுவோடு வீற்றிருக்கிறோம் என்று கருதுகிறோம். அது நம்மை ஆர்ப்பரிக்கச் செய்கிறதல்லவா? அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். நாம் அவ்வாறு இருக்கப் போகிறோம் என்பதாக அல்ல, இப்போது அவ்வாறு இருக்கிறோம். இப்போது, நாம் தேவனுடைய புத்திரராக இருக்கிறோம். இப்போது, தேவனுடைய குமாரத்திகளாக இருக்கிறோம். நாம் அவரோடு அமர்ந்திருக்கப் போகிறோம் என்பதாக அல்ல. இப்போது அவரோடு வீற்றிருக்கிறோம். 11வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாய் உள்ளது என்று இயேசு கூறினார். ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறியாக வேண்டும். இன்று நாம் அதை விட்டு மிகவும் தூரமாய் விலகிப் போயிருக்கிறோம். மதக்கோட்பாடுகளோடு நாம் கலப்படம் செய்து இறுதியாக வறட்டு மனவெழுச்சியைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அவ்வாறே இருக்கும் என்று வேதமும் கூறுகிறது. ஆதாம் தன் மனைவியைச் சேரும் முன்னரே, அவள் பொல்லாங்கனின் வித்தினால் கர்ப்பம் தரித்திருந்தாள். அவள் சாத்தானின் பொய்யை எடுத்து, தேவனுடைய வார்த்தையோடு அதைக் கலப்படம் செய்ய முயற்சித்தாள், அதினால் மரணத்தைப் பிறப்பிக்க காரணமாய் அமைந்தாள். அவளிடத்திலிருந்து பிறந்த முதற் குழந்தை மரணத்தை உடையதாக இருந்தது. அது முதற்கொண்டு ஒவ்வொரு குழந்தையும் மரணத்தை உடையதாய் இருந்தது. யெகோவாவின் மனைவியும் அவர் அவளை எகிப்திலிருந்து வரவழைத்து, அவளைப் பரிசுத்தப்படுத்தி, யாத்திரை புறப்பட்டபோது, வழியில் என்ன செய்தாள்? அவளும் அதே காரியத்தையே செய்தாள். யெகோவா தன் மனைவியை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு எடுத்துச் சென்றார். போகும் வழியில் பிலெயாம் என்ற பெயரையுடைய ஒரு கள்ளத் தீர்க்கதரிசி கூறுவதை அவள் கேட்டாள், அவள் அப்போது என்ன செய்தாள்? “ஏன், நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை. நாம் யாவரும் ஒருமித்திருப்போம், நாம் ஒரு குடும்பமாக இருப்போம்'' என்று கூறினான். 12அதைத்தான் அம்மணவாட்டியும் உலகத்தோடு இணைந்து செய்திருக்கிறாள்; உலகத்தோடு தன் கோட்பாடுகளுடன் ஐக்கியமாகி தேவனுடைய வார்த்தையை மறுதலித்து, ''அற்புதங்களின் காலம் முடிவடைந்துவிட்டது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஒன்றே கிடையாது'' என்று கூறுகின்றனர். அவள் இப்போது எங்கேயிருக்கிறாள்? விவாகரத்து செய்யப்பட்டுள்ளாள். யெகோவாவின் மணவாட்டி செய்ததையே, இயேவின் மணவாட்டியும் செய்தாள்; அதைத்தான் ஆதாமின் மணவாட்டியும் செய்தாள். ஆம், சரியாக அவ்வாறே செய்தாள். மூன்று சாட்சிகளின் வாயினால் எந்த வார்த்தையும் உறுதிப்படும் என்று வேதாகமம் கூறுகிறது. அங்கே மூன்று சபைகள், மூன்று மணவாட்டி கள் உள்ளனர். அவர்கள் யாவரும் அதே காரியத்தைச் செய்தனர். 13ஆனால், இவைகளெல்லாம் இப்படியிருந்துங் கூட, தேவன் உருவாக்குகிற ஒரு உண்மையான மணவாட்டி ஒவ்வொரு காலத்திலிருந்தும் வருகிறாள். ஒவ்வொரு காலத்திலும், ஒரு சீர்திருத்தமானது காணப்பட்டது, அந்த அளவுக்கு வார்த்தையும் பரவியிருந்தது. ஒவ்வொரு சந்ததியும் தனது வேளையைப் பெறுகிறது. அதை எப்போதாகிலும் நீங்கள் கவனித்தீர்களா? ஒவ்வொரு காலத்திலும் ஒரு தேவ மனிதன் புறப்பட்டு வந்து, தேவனுடைய அக்கினியினால் நிறைந்து கிரியை செய்வான். அதனால் ஒரு மகத்தான எழுப்புதலானது ஏற்பட்டு தேச முழுவதிலும் பரவும். என்ன சம்பவிக்கிறது? அவ்வெழுப்புதலுக்குப் பிறகு, உடனடியாக அவர்கள் மனித யோசனையை ஏற்று, அதை ஸ்தாபனமாக ஏற்படுத்திக் கொள்வார்கள். மதக் கோட்பாடுகளை உள்ளே கொண்டு வந்து அதனோடு (வார்த்தையோடு) கலப்படம் செய்துவிட்டார்கள். அதினால் அவள் மரித்துவிடுகிறாள்; திரும்ப ஒரு போதும் எழும்புவதில்லை. அது சரிதான். அவ்வாறு தான் முன்பும் இருந்திருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். ஒவ்வொரு சமயத்திலும் அப்படித்தான். 14ஆனால் ஒவ்வொரு சந்ததியினரும், அவர்கள் என்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்? ஒவ்வொரு காலத்திலும் புத்தம்புதிய தேவனுடைய வார்த்தையைப் பெறும் தருணம் அவர்களுக்கு கிடைத்திருந்தது. உதாரணமாக, லூத்தரின் செய்தி நீதிமானாகுதல் என்பதின் கீழாக வந்தபோதும் சரி, பரிசுத்தமாகுதல் என்ற செய்தியின் கீழாக வெஸ்லியின் செய்தி வந்த போதும் சரி, பெந்தேகோஸ்தே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற செய்தியின் கீழாக வந்தபோதும் சரி, அவ்வாறே இருந்தது. கவனித்தீர்களா? ஒவ்வொரு காலத்தவரும், தனது தருணத்தைப் பெறுகின்றனர். அம்மகத்தான சீர்த்திருத்தக்காரர்களுக்குப் பிறகு வந்த மனிதர்கள் என்ன செய்தார்கள்? அதை ஸ்தாபனமாக ஆக்கி, மதக் குழுவாக ஆக்கிவிட்டனர்; வார்த்தையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுத்துக் கொண்டு, அதனோடு மதக் கோட்பாடுகளை கலப்படம் செய்துவிட்டார்கள். ஒரு புதிய வேத பண்டிதர்களின் குழுவானது தத்துவங்கள் சிலவற்றைக் கொண்டு வந்து, ஏவாள் எவ்விதமாக ஒரு புதிய வெளிச்சத்தைக் காண முயற்சித்து, தேவனுடைய வார்த்தையோடு கலப்படம் செய்தாளோ, அதே போல் இவர்களும் செய்து விடுகின்றனர். அது மரணமாயிருக்கிறது. அப்படியே ஒரு மத ஸ்தாபனமாக ஆகி, ஆவிக்குரிய பிரகாரமாக மரித்துப் போய்விட்டது. அது சரியாக அவ்வாறுதான் நடந்திருக்கிறது. எப்போதும் அவ்வாறே இருந்திருக்கிறது. 15இப்பொழுது, நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி... நீங்கள் அவ்வாறு நினைக்காதிருக்கக் கூடும். ஆனால், நான் இன்றிரவில், (கர்த்தருக்கு சித்தமானால்), “கடைசி காலவித்தின் அடையாளம்” என்ற தலைப்பில் பிரசங்கிக்கப் போகிறேன். கடைசி காலத்தில் வித்தின் அடையாளம் எவ்விதமான அடையாளத்தைக் கொண்டிருக்கப் போகிறது? வார்த்தையை வாசிப்பதற்கு முன்பாக, நாம் தலைகளை வணங்கி அதன் ஆக்கியோனிடத்தில் பேசுவோமாக. நாம் நமது தலைகளை வணங்கின வண்ணமாக இருக்கையில், இன்றிரவில், தேவகுமாரனுடைய வருகையின் நிழலில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். இன்றிரவில் இங்கே விண்ணப்பங்கள் உண்டோ என்று அறிய விரும்புகிறேன். அப்படியிருந்தால், நீங்கள் உத்தமாயிருக்கிறீர்கள் என்று தேவன் அறியவும், தேவன் உங்களுக்குச் செய்ய வேண்டிய காரியம் உங்கள் இருதயத்தில் ஒன்றுண்டு என்பதை தேவன் அறியவும் செய்ய விரும்புகிறேன். அப்படியாயின், உங்கள் கரங்களை உயர்த்தி, “தேவனே, இதோ நான் இங்கே, எனக்கு இன்னின்னதை செய்தருளும்'' என்று கரங்களை உயர்த்தித் தெரிவியுங்கள். உங்களுக்கு நன்றி. 16எங்கள் பரம பிதாவே, நாங்கள் உமது கிருபாசனத்தை அணுகுகிறோம். உம்முடைய நியாயாசனத்தை அல்ல, நாங்கள் உமது நியாயத்தீர்ப்பை வாஞ்சிக்கவில்லை; ஏனெனில், எங்களால் நியாயாசனத்தின் முன்பாக நிற்க இயலாது. ஆனால் எங்களுக்காக ஒருவர் அங்கே நின்றார் என்பதினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசு எங்களுக்காக அங்கே நின்றார், நியாயத் தீர்ப்புக்குட்பட்டார், அதினால் கிருபாசனத்தின் முன்பாக நிற்க எங்களுக்கு உரிமை கிடைக்கும்படியாக ஆயிற்று. நாங்கள் அவருடைய நாமத்தினால் அணுகுகிறோம். அவர் தாமே கூறினார், “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை நான் செய்வேன்...'' (யோ. 16:23; யோ. 14:14). அவருடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும், வேத வாக்கியமாயிருக்கிறது; ஆகவே அவைகள் நிச்சயமாக நிறைவேறியே ஆக வேண்டும். இப்பொழுது வார்த்தையானது உண்மையாயுள்ளது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு மன்னிக்கும் கிருபையை அவருடைய அன்புள்ள கிருபாசனத்திலிருந்து அளிக்கும்படி எங்கள் பிரமபிதாவை கேட்பதற்காக அவரை இயேசுவின் நாமத்தினாலே அணுகுகிறோம். 17தேவன் எங்களுக்கு தமது வார்த்தையை தெளிவுபடுத்தவும், நாங்கள் அறியத் தக்கதாக செய்ய வேண்டுமென்றும், நாங்கள் வாழும் வேளையை வெளிப்படுத்தவும் வேண்டுமென்றும் இன்றிரவில் அவரிடத்தில் விண்ணப்பிக்கிறோம். ஏனெனில், தான் எங்கே போகிறோம் என்பதை அறியாதிருக்கிறவன் திகைத்துத் தடுமாறி இடறுகிறது போல் நாங்கள் இருக்கக் கூடாதென்று விரும்புகிறோம். தான் எங்கே போகிறோம் என்பதை அறியாதவன் இடறுகிறான். நாங்கள் ஒளியின் பிள்ளைகளாயிருக்கிறோமென்றும், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், ஒளியையுடையவர்களாயிருந்து, எங்கே போகிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் நீர் கூறியிருக்கிறீர். சென்றடைகிற தூரம் முழுவதையும் அல்ல, ஆனால் நாங்கள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று அது காண்பிக்கிறது. இக் கூட்டத்தை நோக்கி இன்றிரவில் நாங்கள் அடியெடுத்து வைக்கையில், பரமபிதாவே, இங்கே நாங்கள் இருப்பதில் எங்களுக்கென்று தேவனுடைய நோக்கம் என்ன என்பதை நாங்கள் காணும்படி செய்தருளும் என்று நான் வேண்டுகிறேன். ஓ கர்த்தாவே, இன்றிரவில் இக்கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கரத்தின் பின்னால் உள்ள வேண்டுதல்களின் நோக்கத்திற்கு பதிலளிப்பீராக என்று நான் ஜெபிக்கிறேன். இரட்சிப்பிற்கான வேண்டுதலாயிருந்தால், தேவனே, இன்றிரவில் அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக அருளுவீராக. அவ்விண்ணப்பம், வீட்டுத் தொல்லையாயிருந்தால், வீட்டை சீர்படுத்தும் கர்த்தாவே, சமாதானத்தை தந்தருளும். அது யாராவது கடுந்துன்பத்தில் சிக்கியிருந்தால், அதைப் பற்றிய விண்ணப்பமாக இருந்தால், பிதாவே, உமது இரக்கத்தைத் தந்தருளும். வியாதிப்பட்ட ஒருவருக்கான விண்ணப்பமாயிருந்தால், சுகமளிக்கும் தேவ வசனங்கள் அவர்களுடைய இருதயத்தில் இன்றிரவில் ஆழமாக விதைக்கப்பட்டு, அதினால் நல்ல தெய்வீக சுகமளித்தலாகிய பயிராக நாளை அது முளைக்கட்டும். கர்த்தாவே அதை அளித்தருளும். எங்களுக்கு செவிகொடும். 18இன்றிரவில் வார்த்தையை உம்மிடத்தில் நாங்கள் எங்களோடுங் கூட இந்த பாடங்களோடு சமர்ப்பிக்கிறோம். அதிலிருந்து நீர் எங்களுக்கு பொருத்தமான ஒரு செய்தியை அமைத்துத் தந்து, நாங்கள் அறிய வேண்டியவைகளை எங்களுக்கு வெளிப்படுத்தியருளும். இந்த ஜனங்களை ஆசீர்வதியும். இப்பள்ளிக்கூடத்தை ஆசீர்வதியும். இந்நாளில், ஸ்தாபனங்களைச் சார்ந்திராத ஒருவர் ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறோம் என்று கூறி, இடமளிக்க வேண்டினால், அது திட்ட வட்டமாக மறுக்கப்படும். ஆனால் இப்பள்ளியின் முதல்வரோ திறந்த வாசலை அளித்தார். தேவனே! நீர் அவரை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். ''...இந்தச் சிறியவரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்...'' (மத்தேயு 25:40) என்று வேதத்திலே எழுதப்பட்டுள்ளது என்பதை அவர் அறிந்து கொள்வாராக, ''எப்போது நீர் தேவையுள்ளவராக இருந்தீர், எப்போது நாங்கள் உம்மைக் கவனிக்காமலிருந்தோம்?'' என்பார்கள்... இவர்களுக்கு என்ன செய்தீர்களோ, “அதையே எனக்கும் செய்தீர்கள்'' என்று நீர் கூறினீர். இப்பள்ளிக் கூடத்திலிருந்து வருங்காலத்தில், வல்லமையாக அபிஷேகிக்கப்பட்ட பிரசங்கிகள் புறப்பட்டுச் செல்லட்டும் என்று வேண்டுகிறேன் பரம பிதாவே. இங்கிருக்கிற ஒவ்வொருவருக்காகவும், அவர்களுடைய மேய்ப்பர்களுக்காகவும் வேண்டுகிறேன். அவர்களுடைய சபைகளை ஆசீர்வதியும் கர்த்தாவே . மகத்தான எழுப்புதல் இங்குள்ள சமுதாயத்தின் மத்தியில் ஏற்படட்டும், அதனால் அநேகர் இரட்சிக்கப்படட்டும். வியாதிப்பட்டவர்களையும், துன்பப்பட்டவர்களையும் குணமாக்கியருளும். உமக்கே மகிமையுண்டாகட்டும். இயேசுவின் நாமத்தினாலே வேண்டுகிறோம். ஆமென். 19ஒரு வினோதமான சிறிய வேதவாக்கியம் வாசிக்கப்படுகிறது. நீங்கள் வீடு திரும்புகையில், ஆமோசிலுள்ள அவ்வதிகாரத்தை வாசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஆமோஸ் 3ம் அதிகாரம் 7வது வசனம். நாம் எடுத்துக் கொள்ளும் பொருளுக்காக ஒரு வினோதமான, விசித்திரமான வேதவாக்கியம் இது. தேவன் எப்போதும் வினோதமான - விசித்திரமான வகையில்தான் காரியங்களைச் செய்கிறார். விசித்திரமான வழிகளில் அவர் கிரியைகள் செய்கிறார். பரம இரகசியமான வழிகள், அவர் செய்யம் அற்புதங்கள். “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.'' ஆமோஸ் 3:7 இப்பொழுது, இச்செய்திக்கு நான் அளிக்கும் தலைப்பு “கடைசி கால் வித்தின் அடையாளம்'' என்பதாகும். நேற்றைய தினம், தேவ வார்த்தையாகிய வித்தின் பேரில் அதிகமான அளவு பிரசங்கித்தேன். அனைத்து விஷயங்களும் ஆதியாகமத்தில் தான் துடங்கியது; ஏனெனில் ஆதியாகமம் என்றால், தொடக்கம் அல்லது வேதாகமத்தின் வித்தான, மூலமான அதிகாரம் என்று பொருள். இன்றைக்கு நம்மிடையே காணப்படுகிற பூமியிலுள்ள அனைத்துக்கும் மூலாதாரமானவைகள் ஆதியாகமத்தில் தான் தொடங்கியது. 20இப்பொழுது, நம்மிடையே, ஆதியாகமத்தில் தொடங்காதவைகளெல்லாம் காணப்படுகின்றன. ஏனெனில் அது இனக் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. கலப்பினமானது யாவும் போலியானதாகும். அது தன்னையே பிரதியுற்பத்தி செய்து கொள்ள இயலாது. கலப்பினமான எதுவும் மனிதனால் உண்டாக்கப்பட்டதாகும். அது தன்னை திரும்ப பிறப்பித்துக் கொள்ள இயலாதிருக்கிறது. பல தடவைகளில் நான் கூறிய வண்ணமாக, கால்நடைகள் கருவூட்டுதலை எடுத்துக் கொள்ளுவோம். கழுதையும் பெண் குதிரையும் கலந்து பிறப்பது கோவேறு கழுதையாகும்; அதை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்; கோவேறு கழுதையை கருவூட்ட முடியாது. அது தனது தகப்பன் யார், தாய் யார் என்று அதற்குத் தெரியாது. அது கலப்பினமாக இருக்கிறது. 21இன்றைக்குள்ள மக்காச் சோளத்தை எடுத்துக் கொள்வோம். அது கலப்பினமாக இருக்கிறது. அவர்கள் கூறுவதென்னவெனில், அது மிகவும் அழகாக இருக்கிறது, கதிர்க்கட்டு பெரிதாக இருக்கிறது என்று. ஆனால் அது நல்லது அல்ல. சமீபத்தில் ''ரீடர்ஸ் டைஜஸ்ட்“ என்ற பத்திரிக்கையில் அதைப் பற்றி என்ன எழுதியிருந்தார்கள் தெரியுமா? பெண்கள், தொடர்ச்சியாக கலப்பின மாட்டின் இறைச்சியையும், கோழியின் இறைச்சியையும் சாப்பிட்டுக் கொண்டே வந்தால், இது முதற்கொண்டு இருபது ஆண்டுகளில் மானிட வர்க்கம் நசித்துப் போய்விடும், ஸ்திரீகளுக்கு பிள்ளைப் பேறு இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அது சரிதான். கலப்பினமானது நல்லது அல்ல. மக்காச் சோளத்தை எடுத்து, அதை இனக்கலப்படம் செய்தால், அது பெரிய கதிர்க்கட்டை விளைவிக்கும். அது என்ன செய்கிறது? பெரிய தானி கதிரை நீங்கள் புசிக்க விரும்பினால் தாராளமாக அப்படிச் செய்யுங்கள். ஆனால் அதினால் என்ன ஏற்படுகிறது? திரும்ப அதை விதைத்திடுங்கள், அது தன்னை பிரதியுற்பத்தி செய்து கொள்ள இயலாமல் இருக்கிறது. அது நல்லது அல்ல. அது மரித்திருக்கிறது. ஆகவே ஆதியில் தேவனுடைய வாயினால் உரைக்கப்படாத எதுவும் கலப்பினமானதாகும். 22அவ்விதமாகத்தான் மக்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகிச் செல்லுகிறார்கள். அது கலப்பினமான விஷயமாக ஆகிவிடுகிறது. அது நிச்சயம் மரித்தே ஆக வேண்டும். அது தனது இனத்தை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டு வரமுடியாது. தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க மறுக்கும் எந்த ஒரு சபையும், மதக் கோட்பாடுகள், சடங்காச்சாரங்கள், வேத வாக்கியத்திற்கு முரணான உபதேசங்கள் ஆகியவற்றைக் கொண்ட கலப்பின சபையாகவே விளங்கும். அச்சபையானது ஒருக்காலும் ஆவியால் நிறைந்த ஒரு பிள்ளையை உற்பத்தி செய்ய முடியாது, ஏனெனில், அது கலப்பினமாக இருக்கிறது. அது நல்லது அல்ல. அது பெரிதாக இருக்கலாம், உயர்ந்த மதில்களும், அருமையான பட்டு மெத்தை இருக்கைகளும், பெரிய ஆலய மணிகளும், சொகுசு இருக்கைகளும் கொண்டதாக அது இருக்கலாம். ஆனால் அவையொன்றும் ஒரு பொருட்டல்ல. அது ஆவிக்குரிய பிரகாரமாக மரித்து இருக்கிறது. அது சரிதான். அதினால் ஆவியினால் நிரப்பப்பட்ட பிள்ளைகளை பிறப்பிக்க இயலாது. ஏனெனில் அது மரித்திருக்கிறது. 23நேற்றிரவில் அப்பொருளின் பேரில் ஆறு மணி நேரங்கள் பேசிவிட்டு, மீண்டும் இன்றிரவில் கடைசி கால வித்தின் அடையாளத்திற்கு திரும்பிச் செல்கிறோம். இப்பொழுது, ஞானமுள்ள மக்கள் அனைவரும், தன்னில் புத்தியுடைய எவனும், தன் வாழ்வில் அடுத்து என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறான். நாம் யாவருமே அதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். நான் அடுத்ததாக என்ன செய்யலாம்? இங்கிருந்து நான் எங்கே போகப் போகிறேன்? என்றெல்லாம் யோசிக்கிறோம். ஒரு மனிதன் ஒரு நீரோடையை கடக்கும் போது நடப்பது போல் இருக்கிறது. அவன் ஒரு பாறையின் மேல் காலை எடுத்து வைத்துவிட்டு, அடுத்த அடியை எங்கே வைப்பது என்று தெரியாததினால் சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத்தான் அடுத்த அடியை எடுத்து வைக்கிறான். அவன் குதித்துத் தாவிப் போக முடியாது. அவன் அப்படிச் செய்தால் அவன் தானே மூழ்கிவிடுவான். தான் எங்கே போகிறோம் என்பதை அவன் கவனிக்க வேண்டும். இதை நான் கடந்த பின்னால், அடுத்ததாக எங்கே செல்ல வேண்டும் என்று யோசிக்கிறான். நாம் யாவருமே அந்த விதமாகத்தான் இருக்கிறோம். இங்கிருந்து அடுத்ததாக எங்கே போகப் போகிறோம் என்ற கேள்வி மானிட வர்க்கத்தின் கேள்வியாக காலங்கள் தோறும் இருந்து கொண்டேயிருக்கிறது. 24ஓரிரவில், இங்கிலாந்து தேசத்து இராஜா... அடுத்த நாள் காலையில் ஒரு பரிசுத்தவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தார். அவர்கள் இருவரும் ஒரு கணப்பண்டையிலே அமர்ந்திருந்தனர். அந்த இடம் ஒரு பெரிய பொதுச் சதுக்கம் போல் இருந்தது. அங்கே ஒரு பெரிய நெருப்புச் சூளை இருந்தது, அல்லது கணப்புத் தட்டு என்று நாம் அதை அழைப்போம்; ஏராளமான மரக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடமாக அது இருந்தது. அப்பரிசுத்தவான் இராஜாவுக்கு தேவனைக் குறித்தும், ஒரு சிறிய சிட்டுக் குருவியைக் குறித்தும் கூறி, அவன் தனது பிரசங்கத்தை முடித்துக் கொண்டான். அச்சிறிய சிட்டுக் குருவி இரவு நேரத்தில் இருளில் பறந்தது, வெளிச்சத்திற்குள் பறந்தது, பிறகு வெளிச்சத்தை விட்டு வெளியே பறந்து வந்து மீண்டும் இருளுக்குள் பறந்து சென்றது. அப்பரிசுத்தவான் எழுந்து நின்று, ''அது எங்கிருந்து வந்தது, எங்கே பறந்து சென்றது?'' என்று இராஜாவிடம் கேட்டார். அதைத் தான் நாமும் அறிய விரும்புகிறோம். எங்கிருந்து நாம் வந்தோம்? இங்கே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இங்கிருந்து நாம் எங்கே போகப் போகிறோம்? இப்போது, அவர்கள் நாம் பெற்றிருக்கிற விஞ்ஞானம் அனைத்தும், எத்தனையோ எலும்புகளை நாம் தோண்டியெடுத்திருந்த போதிலும், ஏராளமான புத்தகங்களை நாம் எழுதியிருந்த போதிலும், நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள், நீங்கள் யார், எங்கே போகப் போகிறீர்கள் என்பதைப் பற்றிக் கூறுவதற்கு அங்கே ஒரு புத்தகம் கூட இல்லை. ஒரெயோரு புத்தகம் உள்ளது, அதுதான் வேதாகமம். அது, எங்கிருந்து நீங்கள் வந்தீர்கள் என்பதைப் பற்றியும், இங்கே நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியும், எங்கே நீங்கள் போகப் போகிறீர்கள் என்பதைப் பற்றிக் கூறக் கூடியதாக இருக்கிறது. எனவே, இங்கேயிருந்து நாம் இனி எங்கே போகப் போகிறோம் என்பதை அறிய வேண்டுமானால், அந்த ஒரே புத்தகத்தை நாம் எடுத்துக் கொள்வோம், அது நமக்கு அதைப் பற்றிக் கூறும். 25பழங்கால எலும்புக் கூடுகளை அவர்கள் தோண்டியெடுத்து ஆராய்ச்சி செய்த போதிலும், அவைகள் ஒன்றையும் நிரூபிக்கப் போகிறதில்லை. தேவனுடைய வார்த்தையில்தான் கேள்விக்கு விடை உள்ளது? நாம் கேட்கும் யாவற்றுக்கும் உரிய பதில் அதில்தான் உள்ளது? அது தேவனுடைய புத்தகத்தில் தான் உள்ளது? மனிதன் எப்போதும் அதிசயிக்கிறான். நாம் சில சமயங்களில் வேத வாக்கியங்களை எடுத்துக் கொண்டு படித்து, அவைகளைக் குறித்து அதிசயிக்கிறோம். ஆனால் நாம் அதைக் குறித்து ஆச்சர்யப்படக் கூடாது. அதை உங்களால் விளக்க முடியாது. நீங்கள் விசுவாசிக்க மாத்திரமே செய்ய வேண்டும். விஞ்ஞான பூர்வமாக ஒரு மனிதனும், தேவனை நிரூபிக்க முடியாது. விஞ்ஞான பூர்வமாக உங்களால் தேவனே நிரூபிக்க கூடுமானால், அப்பொழுது அது விசுவாசத்தினால் உண்டானதாக இருக்காது. நாம் தேவனை விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். விசுவாசமானது விஞ்ஞான பூர்வமானதல்ல. மோசே கொஞ்சம் இலைகளைப் பறித்து எடுத்து, “நான் இவைகளை விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்துச் சென்று, அவைகள் நெருப்பினால் எரிந்து போகாமலிருக்கத் தக்கதாகச் செய்யும்படி இவற்றில் என்ன இரசாயனப் பொருட்கள் உள்ளன என்பதைக் கண்டு பிடிக்கப்போகிறேன்'' என்று கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? அப்படிப்பட்டவனாக அவன் இருந்திருந்தால் தேவன் அவனிடம் பேசியிருக்கவே மாட்டார். அவனுக்கு அது தெரியாது. அவன் செய்ததெல்லாம், தன் பாதரட்சைகளைக் கழற்றிவிட்டு, பயபக்தியோடு அமர்ந்திருந்தது தான், அப்போது தேவன் அவனோடு பேசினார். தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்மால் விஞ்ஞான பூர்வமாக நிருபிக்க இயலாது; ஆனால் நாம் கடந்த காலத்தில் திரும்பிப் பார்த்து, ஒவ்வொரு காலத்திலும் தேவன் கூறிய வண்ணமாகவே, அவர் உரைத்தவைகளெல்லாம் அப்படியே நிறைவேறியிருக்கக் காண்கிறோம். ஆகவே, இன்றிரவில் பயபக்தியோடும், அவருடைய வார்த்தைக்கு மரியாதையோடும் நாம் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை உற்று நோக்குவோமாக; நாம் எங்கே போகப் போகிறோம், அதின் நோக்கம் என்ன, இங்கே நாம் எதற்காக இருந்து கொண்டிருக்கிறோம்? இவையாவும் எதைப் பற்றியது என்பதைப் பற்றியெல்லாம் காண்போமாக. 26இங்கே சிறிது காலத்திற்கு முன், நான் மேற்கில் போயிருந்தேன். அங்கே நான் என்னை மாலை உணவுக்காக அழைத்திருந்த ஒரு மனிதனுடைய வீட்டில் நின்று கொண்டிருந்தேன். அம்மனிதர், ''திரு. பிரான்ஹாம்அவர்களே, அங்கே கணப்பண்டையிலே வைக்கப்பட்டிருக்கும் மரத்தில் செதுக்கப்பட்ட அந்த சிற்பத்தை நீங்கள் புகழுகிறதை நான் கண்டேன்'' என்று கூறினார். ''ஆம் ஐயா'' என்றேன் நான். அச்சிற்பமானது எருதுகள் பூட்டப்பட்ட கூண்டு வண்டியாகும் (இரட்டை மாட்டு கூண்டு வண்டி - தமிழாக்கியோன்); அவ்வண்டியில் முன்னால் ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறான், ஒரு சிறுவன் தன் தாயோடு அமர்ந்திருக்கிறான், அவர்கள் பயணிக்கிறார்கள்; இவ்விதமாக சிற்பம் வடிக்கப்பட்டிருந்தது. அம்மனிதர் என்னிடம், ''அது என் தாயும் தகப்பனுமாவர்; அச்சிறுவன் நான் தான்'' என்று கூறினார். ''நாங்கள் இவ்வூருக்கு மாட்டு வண்டியில் தான் வந்தோம். ஆனால் அப்பொழுதிலிருந்து நாங்கள் விருத்தியடைந்தோம். “இந்த முற்றத்தில் வந்து சற்று எட்டிப் பாருங்கள்'' என்று கூறினார். எத்தனை ஆயிரம் ஏக்கர்கள் பண்ணை நிலங்கள் அவருக்கு இருந்தது என்பதை நான் மறந்து போய் விட்டேன். ''நான் என் இளவயதின் நாட்களிலே அவைகளை கிரயத்துக்குக் கொண்டேன்'' என்று கூறினார். ''மேற்கில் இதை அடுத்து உள்ள கால்நடை வளர்ப்புப் பண்ணையை நான் சொந்தமாக கொண்டிருக்கிறேன், இதற்கடுத்து தெற்கில் உள்ளதையும் நான்தான் சொந்தமாக கொண்டிருக்கிறேன். அங்கே தூரத்தில் புகை தெரிகிறதை நீங்கள் காண்கிறீர்களா?“ என்று கூறினார். ''ஆம் ஐயா'' என்றேன். ''அது ஒரு நகரம்“ என்றார். அங்கே எவ்வளவு சொத்துக்கள் அவருக்கு சொந்தமாக உள்ளன என்பதை நான் மறந்துவிட்டேன். ''அந்நகரத்தில் உள்ள வங்கியின் தலைவர் நான் தான்'' என்று அவர் கூறியதோடு, இன்னும் அவருக்கு என்னவெல்லாம் உள்ளன என்பதையெல்லாம் விவரித்தார். 27அவர் கூறியவைகளையெல்லாம் சற்று நேரம் நான் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ''ஐயா, உம்மிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்; கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கால்நடை வளர்ப்புப் பண்ணைகளையும் நகரத்தையும் சுட்டிக் காண்பித்து, அவைகளையெல்லாம் இங்கும் அங்குமாக சுற்றி நோக்கி, அவைகள் உமக்கு சொந்தமாக இருக்கின்றன என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டுமென நீர் விரும்பினர். ஆனால் ஒரு நாளிலே நீர் அவைகளையெல்லாம் விட்டு விட்டு செல்ல வேண்டியதாயிருக்குமே, அப்பொழுது இங்கிருந்து நீர் எங்கே செல்லுவீர்? அதுதான் பிரதானமான காரியம் என்று நான் கூறினேன். அதுதான் பிரதானமான காரியம். இங்கே தங்கியிருப்பது ஒரு குறுகிய காலத்திற்குத்தான். ஆனால் அங்கே நித்தியமான காலத்திற்கு தங்கப் போகிறோம். ஆகவே நித்திய காலத்தை கழிக்க நாம் எங்கே போகப் போகிறோம் என்பதை நாம் பரிசீலித்தேயாக வேண்டுமென்று நான் எண்ணுகிறேன். நாம் நமது குடும்பங்களுக்கு, வீட்டு வசதி, கல்வி, ஏனைய சௌகரியங்கள் இவை யாவையும் அளிக்கிறோம், ஆனால் நமது வாழ்க்கைப் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வருகிற வரையிலும் பிரதானமான காரியங்களையெல்லாம் செய்யாமல் விட்டுவிட்டு, தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாதவர்களாக, அவருடைய இரட்சிப்பின் திட்டத்தைக் குறித்தும் அறியாமல், இயேசுகிறிஸ்துவின் மீட்பின் கிருபையையும் குறித்து அறியாதவர்களாக இருந்துவிட்டு, இவ்வுலக வாழ்வுக்கு அப்பால் உள்ள காலத்திற்குள் நம்மை நாமே மூழ்கடித்துக் கொண்டு விடுகிறோம். 28ஞானமுள்ள மக்கள், தாங்கள் காலவரையறைக்குட்பட்ட சிருஷ்டி என்பதை கண்டுபிடிக்கும் போது, காலம் முடிந்ததின் பின்னால் என்ன உள்ளது என்பதைப் பற்றி ஆச்சர்யப்படுகின்றனர். சற்று நேரம் யோபு என்ற பெயரையுடைய ஒரு மனிதனைக் குறித்து நான் பேசப் போகிறேன். யோபின் புத்தகம் தான் வேதாகமத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். தான் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்தவர்களுக்குள், மிகவும் ஞானமுள்ள மனிதர்களுக்குள் யோபுவும் ஒருவனாக இருந்தான் என்று நாம் அறிகிறோம். சந்தைவெளிகளில் யோபு சென்ற பொழுது, அங்கே இருந்த இளம் அதிபதிகள் அவனுடைய ஞானத்தினிமித்தமாக, அவனுக்கு முன்பாக பணிந்து வணங்கினர் என்று யோபு கூறுகிறார். அவன் ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். அவனுக்கு இந்த உயரிய காரியங்களெல்லாம் இருந்துங்கூட, அவன் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தான்; இவ்வுலக வாழ்வு முடிந்ததின் பின்னால் என்ன இருக்கப் போகிறது என்ன சம்பவிக்க போகிறது என்பதைப் பற்றியெல்லாம் அறிய விரும்பினான். ஆகவே அவன் அப்பொழுது பேசினான்; தேவனுடைய சிருஷ்டிப்பை கவனிக்க ஆரம்பித்தான். தேவனிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு வார்த்தையினால் தான் சிருஷ்டிக்கப்பட்டன என்பதை அறிந்திருந்தான். ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு, அது வெட்டிப் போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும்...'' (யோபு 14:7) என்று அவன் கவனித்துப் பார்த்து, இப்படியாகக் கூறினான். 29நீங்கள் இயற்கையை கூர்ந்து கவனித்தால், தேவன் தமது மகத்தான வழியின் மூலம் தன்னுடைய உணர்வுகளை மக்களுக்குத் திட்டவட்டமாக அறியச் செய்யும்படி, அவர்கள் ஒரு வேதாகமத்தை உடையவர்களாக இருக்கிறார்களோ இல்லையோ, உங்களுக்கு இயற்கையின் மூலம் தம்மை அறியும்படி தெரியப்படுத்துகிறார். காலையில் உதிக்கும் சூரியனைக் கவனித்துப் பாருங்கள். சூரியனுக்கு என்ன நேரிடுகிறது? கிழக்கிலே அது ஒரு குழந்தையாகப் பிறக்கிறது? சுமார் 10 மணியளவுக்கு அது தன் வாலிபப் பிராயத்தை எட்டுகிறது. பகல் வேளையில் அது தன் சத்துவத்தைக் கொண்டதாக இருக்கிறது. பிற்பகல் வேளையில் அது தன் நடுத்தர வயதை அடைகிறது. மாலைப் பொழுதில் அது மறைந்துவிடுகிறது. அது அஸ்தமித்து விடுகிறது. அதன் வேளை முடிவடைகிறது. சூரியனின் காரியம் அத்தோடு முடிவடைந்து விடுகிறதா? அல்ல. தேவனுக்கு சூரியனைக் குறித்து ஒரு நோக்கம் உண்டு. ஆகவே, அடுத்த நாள் காலையில், சூரியன் மீண்டும் எழும்பி வருகிறது. அது எதைக் குறித்துப் பேசுகிறது? பிறப்பு, வாழ்வு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவைகளைக் குறித்துத்தான் பேசுகிறது. 30உங்களுடைய மலர்களைப் பாருங்கள். இன்று இங்கு வந்து கொண்டிருக்கையில் நான் மலர்களைக் கவனித்துப் பார்த்தேன்; அவைகள் எவ்வளவு அழகுள்ளதாய் இருக்கிறது. அவைகள் யாவும் இங்கே ஒரு நோக்கத்திற்காகவே இருக்கின்றன. அவைகள் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தைகளாக இருக்கின்றன. தேவன் அவைகளை வார்த்தையை உரைத்து இருக்கும்படி செய்தார். அவர் அதைச் செய்தபொழுது நடக்கிறதை கவனியுங்கள். உங்கள் வளாகத்தில் அவைகள் அழகுற நின்று கொண்டிருக்கின்றன. சில காலத்திற்குப் பிறகு, உறைபனி அதைத் தாக்குகிறது. இளவயதுள்ளவைகள், முதிர் வயதுள்ளவைகள், நடுத்தர வயதுள்ளவைகள் யாவையும், அவைகளை உறைபனி தாக்குகையில், அவைகளுக்கு மரணம் ஏற்படுகிறது. தங்கள் தலைகளை அவைகள் தாழ்த்தும் போது என்ன நடக்கிறது? அவைகளிலிருந்து ஒரு விதமான கருமை நிற வித்துக்கள் உதிர்கின்றன. நீங்கள் விசுவாசித்தாலும் சரி, விசுவாசிக்காவிட்டாலும் சரி, தேவன் அவைகளுக்கு ஒரு அடக்க ஆராதனைக்கான ஊர்வலத்தை நடத்துகிறார். இலையுதிர் காலத்து மழை வருகையில், அவைகள் ஆகாயத்திலிருந்து விழும் கண்ணீர்த் துளிகளாக இருந்து, வித்தை அடக்கம் செய்கிறது. குளிர் காலம் வருகிறது. அப்போது, பூவிதழ்கள் உதிர்கின்றன; தண்டுப் பாகம் போய் விடுகிறது. அடிநிலத்தண்டு போய்விடுகிறது; வித்தானது உறைந்து போய்விடுகிறது; வெடித்துக் கிளம்புகிறது; அதின் கதுப்பு சிந்திவிடுகிறது. அத்தோடு வித்து முடிவடைந்து விடுகிறதா? இல்லை ஐயா. உஷ்ணமான சூரியன் பிரகாசிக்கட்டும், அப்போது அனைத்துத் தாவரவர்க்கமும் உயிர்த்தெழுதலைப் பெறுகிறது. சூரியனானது பூமியைப் பிரகாசிக்கச் செய்யும்பொழுது, அது உஷ்ணமடைந்து, அதினால், வித்தில் உள்ள ஜீவ அணுவானது உயிரடைகிறது. இப்பொழுது, நாம் இங்கே ஒரு நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் அந்நோக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்; மரணம் அல்லது ஜீவன் இவற்றில் ஏதாவதொன்றைத் தெரிந்தெடுத்தேயாக வேண்டும். ஆகவே, நாம் இங்கே ஒரு நோக்கத்திற்காகவே வைக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் நாம் அந்நோக்கத்தை நிறைவேற்றவே செயல்பட வேண்டும்; அது தேவனை சேவிப்பதான நோக்கமாகும்; ஏனெனில் நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக இருக்கிறோம். 31யோபு, சிருஷ்டிப்பை கூர்ந்து கவனித்தான். மரணத்திற்குப் பிறகு, அத்தோடு முடிவு ஏற்பட்டு விடாது என்பதைக் கண்டான். மரணத்திற்குப் பிறகு, மீண்டும் ஜீவன் உண்டு என்பதைக் கண்டு கொண்டான். ஜீவனானது. சூரியனானது சரியானபடி தோன்றும்போது, மீண்டும் ஜீவன் உண்டாகிறது. “நல்லது ஒரு வித்தானது தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டானதாயிருந்தால், அது அதற்குரிய நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு மரித்துவிடுகிறது, ஆனால் மனிதனோ...'' என்று அவன் கூறினான். (யோபைக் குறித்து கூறுகிறார் - தமிழாக்கியோன்) நான் இப்பொழுது யோபின் புத்தகத்திலிருந்து ஒரு வேத வாக்கியத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். யோபு 14-ம் அதிகாரம், ”...மனுஷன் படுத்துக்கிடக்கிறான். (யோபு 14:12)“, ”...மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்து போகிறான்; மனுபுத்திரன் ஜீவித்துப் போன பின் அவன் எங்கே?'' (யோபு 14:10); அவன் குமாரர்கள் வந்து அவனுக்காக புலம்பினாலும் அவன் அதை உணரான். ''நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து வைக்க வேண்டுமே என்று அவன் விண்ணப்பித்தான். (யோபு 14:13). யோபு கூறினான்; “மலர் மரிக்கின்றது; அது தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது, மீண்டும் எழும்புகிறது”? ஒரு மரம் மரிப்பதைக் காண்கிறேன்; இலையுதிர்காலத்தில் மரமானது தன் இலைகளை உதிர்த்துவிடுகிறது. 32ஒரு மரத்தை நீங்கள் கவனித்துப் பார்த்ததுண்டா? அது கோடை காலத்தில் தன் இலைகளை துளிர்க்கச் செய்து, அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. இலையுதிர்காலம் வருகிறது. உறைபனி விழும் முன்னர், இலையானது மஞ்சள், சிவப்பு, பழுப்பு நிறங்களாக மாறுதல் அடைகிறது. சிறிது காலத்தில், மரத்தை விட்டு உதிர்ந்து விடுகின்றன. அத்தோடு மரத்தின் வாழ்வு முடிவடைந்து விடுகிறதா? இல்லை. என்ன சம்பவிக்கிறது? இலையிலிருந்து ஜீவனானது, அது எங்கிருந்து வந்ததோ அதே இடத்திற்கு, அதாவது மரத்தின் வேருக்கே திரும்பிச் சென்றடைந்து விடுகிறது. அதன்பிறகு அது என்ன செய்கிறது? இளவேனிற் காலத்தில், அது ஒரு உயிர்த்தெழுதலைக் கொண்டு வருகிறது, அதே ஜீவனோடு புதிய இலையானது ஒரு உயிர்த்தெழுதலைக் கொண்டு புறப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் ஜீவ விருட்சத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பழைய பாவ சரீரத்தை விட்டு ஜீவனானது புறப்பட்டு, தன்னைத் தந்த தேவனிடத்திற்குத் திரும்பிச் சென்று, புதிதான ஒன்றோடு திரும்பி வருவதற்கு இருக்கிறது. ஏனெனில் அது ஒரு நோக்கத்தை நிறைவேற்ற செயல்படுகிறது. 33சிறிது காலத்திற்கு முன்பு இங்கிருந்து நேரே வடக்கில் கெண்டக்கி மாநிலத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் திரு. வுட் அவர்களுடன் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். அவர் சபையின் தர்மகர்த்தாக்களுள் ஒருவராவார்; அவர் இன்றிரவில் நம்மோடு இங்கே இருக்கிறார். ஆக்டன் நகரத்தில் மெத்தடிஸ்ட் சபை மைதானத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினேன். அங்கே ஒரு இரவில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்; கர்த்தர் மகத்தான காரியங்களைச் செய்தார். வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஒரு சுகமளித்தல் ஆராதனையை நாங்கள் நடத்திக் கொண்டிருந்தோம். நீங்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தீர்கள், என்ன சம்பவித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் சுகமளிக்க முடியாது; எந்தவொரு மனிதனும் அதைச் செய்ய முடியாது. தேவன் அதை ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். நீங்கள் அதை விசுவாசிக்க மாத்திரம் செய்ய வேண்டும். ஆகவே அவருக்கென ஒரு வழியுண்டு. அது என்னவெனில், கடைசி நாட்களில், ஆவிகளைப் பகுத்தறிந்து கிரியை செய்யும் ஒரு வரமானது உண்டாயிருக்கும் என்று அவர் வாக்குரைத்திருக்கிறார். நாம் அதை நூறு சதவீதம் அறிந்திருக்கிறோம்; ஏனெனில், அது தேவனுடைய வார்த்தை. அவரது வாக்குத்தத்தத்தை இக்கடைசி நாட்களுக்கென பிரத்தியட்சப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. 34அக்கூட்டத்தில் ஒரு ஸ்திரீ இருந்தாள். அத்தேசத்தில் இதற்கு முன்னர் நான் இருந்ததில்லை. அந்த ஜனக்கூட்டத்தில் ஒரு ஸ்திரீ பின்னால் அமர்ந்திருந்தாள். பரிசுத்த ஆவியானவர் மக்கள் மத்தியில் அசைவாடிய பொழுது, இங்கு ஒருவர், அங்கொருவர் என்று அழைத்துக் கொண்டிருந்தார். அதுதானே நமது கர்த்தராகிய இயேசுவாகும். அவரது வார்த்தையானது அவரது சபையாகிய சரீரத்தில் பிரத்தியட்சமாயிருந்தது. பிறகு, அவர் பேச ஆரம்பித்த பொழுது... இயசுே அம்மைதானத்தில் நின்றிருந்து, அவர்களுடைய இருதயத்தின் சிந்தனைகளை அறிந்தவராய், அவர்களோடு பேசினார். மக்களிடத்தில் பல்வேறு காரியங்களைக் குறித்துப் பேசினார்; வேதத்தை வாசித்தறிந்திருக்கிற நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறபடி, கடைசி நாட்களில், அதே காரியங்கள் மீண்டும் சம்பவிக்கும் என்று அவர் வேதவாக்கியங்களிலே வாக்குரைத்திருக்கிறார். 35இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டுவது என்னவெனில்; அப்பொழுது அச்சம்பவம் நடைபெற்ற பொழுது, மைதானத்தின் மிகவும் பின்பகுதியில், அப்பெரிய மைதானத்தில் ஒரு பெண்மணி அழுது கொண்டிருந்தாள். அங்கே அநேக நூற்றுக்கணக்கில் மக்கள் அமர்ந்திருந்தனர், அங்கே ஒரு பெண்மணி அழுது கொண்டிருந்தாள். பரிசுத்த ஆவியானவர் அப்பெண்மணியினிடம் சென்று கூறியதைக் கவனியுங்கள். ''நீ உன் சகோதரிக்காக அழுது கொண்டிருக்கிறாய், அவளுடைய பெயர் இன்னின்னது, அவள் ஒரு குறிப்பிட்ட ஊரில் வாழ்கிறாள்; நீ வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பாகவே, உன்னுடைய பாக்கெட் புத்தகத்தில் ஒரு கைக்குட்டையை நீ வைத்துக் கொண்டு வந்தாய். நீ அந்தக் கைக்குட்டையை எடுத்துக் கொண்டு போய், உன் சகோதரியின் மேல் வைத்திடுவாயாக. அவர் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாள். கர்த்தர் உரைக்கிறது என்னவெனில், அவள் பிழைத்துவிடுவாள்'' என்றார். அந்த பெண்மணி அக்கைக்குட்டையை எடுத்துக் கொண்டு போய், அன்றிரவிலேயே தன் சகோதரியின் மேல் வைத்தாள். அடுத்த நாள் காலையில் அவள் சொஸ்தமானாள். 36இப்பொழுது... ஆகவே நான்... அப்பருவ காலம் மிகவும் வெப்பமாயிருந்தது. அணில் வேட்டையானது... என்னுடைய அநேக உடன் அணில் வேட்டைக்காரர்கள் அறிந்திருக்கிறபடி, இலைகள் அசைவதினால் ஏற்படும் சப்தமானது, அணில்களை மருள வைத்துவிடும். நாங்களோ... அப்போது மிகவும் வறட்சியாக இருந்தது. காட்டிலே நடந்து செல்லும்படி குழிகள் உள்ள ஒரு இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டியதாயிருந்தது. என்னுடைய நண்பரின் பெயர் திரு. வுட் என்பதாகும். அவர் எனக்கு வலப்புறமாக அமர்ந்திருக்கிறார். அவர் என்னிடம், “அங்கே ஒரு மனிதன் இருக்கிறார். அவர் அநேக ஏக்கரா நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார். அவரோடு இடைபடுவது மிகவும் கடினமானதாகும். அவர் தேவனற்றவர். அவர் தேவனில் விசுவாசம் இல்லாதவர். அவர் அதைப் பற்றி கேலி செய்பவர். ஆனால் அவர் என்னை அறிந்திருக்கிறார், என் தந்தையையும் அவர் அறிவார். நாம் அவருடைய இடத்தில் போய் வேட்டையாடுவதற்கு நான் கேட்கட்டுமா?'' என்று கேட்டார். ''நாம் போவோம்'' என்று கூறினேன். 37நாங்கள் கிராமப்புறத்தில் தொலைதூரத்தில் பக்க வழியாக பயணித்தோம். அங்கே ஒரு ஆப்பிள் மரத்தின் கீழாக இரு முதியவர்கள் அமர்ந்திருந்தனர். ''அதோ அவர் அங்கே வலப்புறமாக உட்கார்ந்திருக்கிறார்'' என்று வுட் கூறினார். “நான் ஊழியக்காரனான படியால் நான் காரிலேயே உட்கார்ந்து இருக்கிறேன்'' என்று நான் கூறினேன். ஆகவே அவர் (சகோ. வுட்டு போய்), “நீங்கள் நலந்தானா என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், ''வாருங்கள், அமருங்கள்'' என்றார். ''என்னுடைய பெயர் வுட். நாங்கள் சற்று நேரம் உங்களுடைய இடத்தில் வேட்டையாட அனுமதிப்பீர்களா என்று அறிய விரும்புகிறேன்'' என்றார் வுட். “நீ எந்த வுட்'' என்றார் அவர். ''நாம் ஜிம் வுட்-ன் மகன்'' என்றார். ''ஜிம் வுட் என்னுடைய நண்பர்தான், அவருடைய மகன்களில் எந்த ஒருவனும் இந்த ஸ்தலத்தில் தாரளாமாக வேட்டையாடலாம்“ என்றார் அவர். ''உமக்கு நன்றி'' என்றார் வுட். ''நீ அதில் யார் என்று அறிய நான் விரும்புகிறேன்'' என்றார் அவர். (வுட் என்பது குடும்பப் பெயர்). ஆகவே தகப்பனுடைய பெயரை மகன்கள் கொண்டிருப்பார்கள். மகன்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வுட் என்ற பெயருக்கு முன்பாகத் தமது பெயரைக் கொண்டிருப்பார்கள். ஆகவே நீ எந்த வுட் என்று கேட்கிறார் - தமிழாக்கியோன்) ''நான் பாங்க்ஸ்“ என்று பதிலளித்தார். (இவரது பெயர் முழுப் பெயர் - பாங்க்ஸ் வுட் என்பதாகும் - தமிழாக்கியோன்). அவர் அம் மனிதரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். திரு. வுட் கூறினார்; ''எங்களோடு எங்களுடைய மேய்ப்பரையும் அழைத்துச் செல்வது உங்களுக்கு சம்மதமாயிருக்குமா என்று அறிய விரும்புகிறேன்'' என்றார். அதற்கு அவர், ''நீர் உம்மோடு, நீர் எங்கே சென்றாலும், அங்கெல்லாம் ஒரு பிரசங்கியாரை அழைத்துக் கொண்டு செல்லுமளவுக்கு அவ்வளவு கீழ்த்தரமாக ஆகிவிட்டதாக, நீங்கள் காண்பிக்கக்கூடாது'' என்றார். ''என்னுடைய பாஸ்டர் (மேய்ப்பர்) அதோ அங்கே இருக்கிறார்'' என்றார். 38அப்போது, நான் காரைவிட்டு இறங்கிவிட எண்ணினேன். நான் காரைவிட்டு இறங்கி அவர்கள் இருந்த இடத்திற்கு நடந்து சென்றேன். ''நீங்கள் நலந்தானா“ என்று விசாரித்தேன். ''நீங்கள் நலந்தானா? ஆக நீங்கள் தான் அந்தப் பிரசங்கியார் போலும்“ என்றார். ''ஆம் ஐயா'' என்றேன் நான். அவர் கூறினார், “நல்லது, நான் ஒரு தேவனற்றவன் என்று கருதப்படுகிறவன்''. “நல்லது, அதைப் பற்றி மேன்மை பாராட்டிக் கொள்ள ஒன்றுமில்லை அல்லவா?'' என்றேன் நான். ''அவ்வாறு இல்லை என்று தான் நானும் கருதுகிறேன்“. “ஆனால் பிரசங்கிகளாகிய உங்களுக்கெதிராக உள்ள என்னுடைய அபிப்பிராயம் என்னவெனில், நீங்கள் அறியாதிருக்கிற ஒன்றைப் பற்றித் தான் நீங்கள் பிரசங்கிக்கிறீர்கள்'' என்றார் அவர். ''ஓ, அவ்வாறு தான் உள்ளதா?'' என்று நான் வினவினேன். ''ஆம் ஐயா, அவர்கள் எப்போதும், அதைப் பற்றி, ஒரு தேவனைப் பற்றியும் ஏனைய காரியங்களைப் பற்றியும் வீண் பெருமையடித்துக் கொண்டு பேசுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒன்று இல்லவே இல்லை'' என்று பதிலளித்தார். நான் பதிலளித்து, “நல்லது, ஒவ்வொருவரும் தங்கள் சிந்தை என்ன சொல்லுகிறதோ அதேவிதமாகத் தான் அறிந்திருக்கிறார்கள், நீங்கள் அவ்வாறே அறிந்திருந்து அது எப்படியென்று கூறுகிறீர்கள்'' என்று கூறினேன். நான் என் இருதயத்தில் சிந்தித்துக் கொண்டு, ”இப்பொழுதும், கர்த்தாவே, இந்த மனிதன் சந்தேகத்துக்கிடமின்றி உண்மையுள்ள மனிதன் எனத் தோன்றுகிறது. அம்மனிதனுக்கு உதவும்படி நீர் எனக்கு ஒன்றைத் தாரும் என்று விண்ணப்பித்தேன். அவர் கூறினார், ''என் ஜீவிய காலத்திலேயே ஒரேயொரு பிரசங்கியைத்தான் பிரசங்கிக்க கேட்க விரும்புவேன், அவர் பேசியதைக் கேட்டிருக்கிறேன்'' என்றார். ''அவர் யார் ஐயா?“ என்று நான் அவரிடம் கேட்டேன். ''இங்கே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஆக்டன் என்ற நகரத்திலே ஒரு பிரசங்கியார் வந்திருந்தார்'' என்றார் அவர். “இம்மலைப் பிரதேசத்தில் ஒரு முதிர்வயதுள்ள பெண்மணி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக படுக்கையில் இருந்தாள். நானும் என் மனைவியும்... அவர்களால் அவளை நோயாளிக்குரிய கழிகலத்தில் கூட இருக்க வைக்க முடியவில்லை. அதற்காக அவர்கள் ஒருவகையான ஷீட்டைத்தான் உபயோகித்தார்கள். அன்று காலையில் நாங்கள் அங்கே இருந்தோம். அதற்கு முன் தினம் மருத்துவர், இரவிலேயே அந்தப் பெண்மணி இறந்துவிடுவாள் என்று கூறியிருந்தார் என்று அவர் கூறினார். 39அவர் மேலும், ''அப்பெண்மணிக்கு வயிற்றில் புற்றுநோய் இருந்தது. அது அவளை முழுவதும் தின்றுவிட்டது. பார்லி தண்ணீர் கூட அவளால் சில வாரங்களாக குடிக்க முடியவில்லை. அவளுக்கு அவர்கள் க்ளுகோஸ் அவளுடைய இரத்த நாளங்களின் வழியாகத்தான் செலுத்தினார்கள். கடைசியில் அந்நாளங்கள் கூட செயலிழந்துவிட்டன. அவளுக்காக இனி செய்யப்பட வேண்டியது ஒன்றுமேயில்லை என்று சொன்னார்“ என்று அவர் கூறினார். ''அப்பெண்மணியின் சகோதரி அந்தப் பிரசங்கியார் பிரசங்கிக்கக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்பிரசங்கியாருக்கு இப்பிரதேசத்திலுள்ளவர்கள் எவரையும் தெரியாது, அவர் இப்பகுதியில் இதற்கு முன் வந்ததே கிடையாது; ஆயினும், அவர் அப்பெண்மணி யார் என்றும், அவளுடைய சகோதரி என்னவாயிருக்கிறாள் என்றும், அவள் தன்னிடம் உள்ள கைக்குட்டையைக் குறித்து சிந்தித்தாள் என்றும், அதைக் கொண்டு போய் வியாதிப்பட்ட அப்பெண்மணியின் மேல் வைக்கவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்'' என்று சொன்னார். ''அன்றிரவில் அங்கே அவர்களிடத்தில் இரட்சண்ய சேனை சபையினர் வந்திருந்து மிகுந்த கூச்சலிட்டார்கள். அடுத்த நாள் காலையில் அவள் மரித்துவிட்டாளா என்று பார்க்க நாங்கள் அங்கே சென்றோம். நாங்கள் அங்கே சென்றபொழுது, அவள் எழுந்திருந்து, பொறித்த ஆப்பிள் பை“ என்ற உணவை சமைத்துப் புசித்துக் கொண்டிருந்தாள். அண்டை வீட்டாரின் வேலையைக் கூட அவள் செய்தாள் என்று கூறினார்கள்'' என்று இவ்வாறாக தொடர்ந்து அம்மனிதர் கூறினார். அதற்கு, நான், ''அதைப் பற்றி மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறதே'' என்று கூறினேன். 40அவர் தொடர்ந்தார்; ''நல்லது, நான் அறிய விரும்புவது இது தான். நான் அப்பிரசங்கியாரைக் காண நேர்ந்தால், அப்பெண்மணியைக் குறித்தும் அவள் சொஸ்தமாவாள் என்பதைக் குறித்தும் கூறும்படி அவருக்கு கூறியது எது என்று கேட்கப் போகிறேன்'' என்று கூறினார். ''ஓ, ஆம் ஐயா'' என்றேன். என் ஆடையின் மேல் அணிலின் இரத்தம் எங்கும் தெறித்திருந்தது; கிருதா அழுக்கடைந்து நீளமாய் வளர்ந்திருந்தது. “இப்பொழுது என்னைப் பார்த்தால் ஒரு பிரசங்கியாரைப் போல் காணப்படவில்லையல்லவா? என்றேன். நான். ''நல்லது, அதிகமாக மனுஷிகமாக தெரிகிறது'' என்றார் அவர். ''ஆம் ஐயா'' என்றேன். எனவே நான் கூறினேன், “இந்த ஆப்பிள் பழங்களில் ஒன்றை நான் புசிக்கலாமா'' என்று கேட்டேன். சிறிய மஞ்சள் நிற குளவிகள் அதின் மேல் இருந்தது. ''ஆம், நீங்கள் எடுத்துப் புசியுங்கள். மஞ்சள் நிற குளவிகள் அவைகளை தின்றுவிடுகின்றன'' என்று கூறினார். “உங்களுக்கு நன்றி'' என்று நான் கூறிவிட்டு, ஒரு ஆப்பிளை எடுத்து கடித்தேன். ”இது அருமையான ஆப்பிள்“ என்றேன். ''ஆம், அப்பழைய மரமானது எனக்கு ஏராளமான கனிகளை தந்துள்ளது“ என்று கூறினார். ''ஆம் ஐயா, இம்மரத்தின் வயது என்ன'' என்று கேட்டேன். ''சுமார் நாற்பது ஆண்டுகள் இருக்கும். நான் அதை வேறு ஒரு இடத்திலிருந்து பிடுங்கி நட்டேன்'' என்று அவர் கூறினார். 41“ஊ ஹ, அம்மரத்திலிருந்து ஆப்பிள்களெல்லாம் கொட்டிக் கொண்டிருக்கின்றன, இலைகளும் உதிர்ந்து கொண்டிருக்கின்றன'' என்று நான் சொன்னேன். ''ஆம், அது அவ்வாறு தான் செய்கிறது'' என்று பதிலளித்தார். ''நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்'' என்று கூறினேன். ''சரி ஐயா, கேளுங்கள்'' என்றார் அவர். ''இவ்வாறு சம்பவிக்கக் காரணம் என்ன நமக்கு இப்போது, உறைபனியும் இல்லையே. இப்போது ஆகஸ்ட் மாதம் பாதி முடிந்திருக்கிறது. அக்டோபர் அல்லது நவம்பர் வரையிலும் உள்ள காலத்தில் உறைபனி இருக்காதே. ஆனால் ஆகஸ்ட் மத்தியிலே இலைகள் மரத்தினின்று உதிர்கின்றனவே. இவ்வாறு இலைகள் உதிர்வதற்குக் காரணம் என்ன?'' என்று நான் கேட்டேன். ''உயிர்ச் சத்தானது அதைவிட்டுஅகன்று கொண்டிருக்கிறது'' என்றார். “அவ்வுயிர்ச் சத்தானது அதைவிட்டு அகலாமற் போனால் என்ன ஆகும்'' என்றேன் நான். ''அப்படியில்லாவிட்டால், குளிர்காலத்தில் மரமானது அழிக்கப்பட்டு விடும். அவ்வுயிர்ச்சத்தில் தான் மரத்தின் ஜீவ கருமூலம் உள்ளது. ஆகவே அப்படியில்லாவிடில் மரமானது அழிந்துவிடும்“ என்று பதிலளித்தார். ''ஆம் ஐயா, ஆகவே, அவ்வுயிர்ச்சத்தானது மரத்தின் வேர்களுக்கு திரும்பிச் சென்றுவிடுகிறது. அங்கே கதகதப்பாக இருக்கிறபடியால், அது குளிர்காலம் முழுவதும் அங்கேயே தங்கியிருந்துவிட்டு, மீண்டும் கோடை காலத்தில் மேலே வந்து, இன்னும் அதிகமான இலைகளையும், அதிகமான ஆப்பிள் பழங்களையும் கொடுக்கிறது'' என்று நான் கூறினேன். அதற்கு அவர், “அவ்வாறுதான் நடக்கிறது'' என்றார். 42''நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த அறிவுத் திறன் எத்தகையது? இப்போது, மரத்திற்கு அறிவுத்திறன் ஒன்றுமேயில்லை. “இது குளிர்காலம் வரப்போகிற சமயமாயிருக்கிறது. ஆகவே, வசந்தகாலம் வருகிற வரையிலும், நீ போய் வேர்ப்பகுதியில் போய் தங்கியிரு; என்று மரத்திடம் என்ன அறிவுத்திறனானது முன்னுரைக்கிறது?'' என்று நான் அவரிடம் கேட்டேன். ஒரு வாளியில் தண்ணீர் நிறைத்து, அதை ஒரு கம்பத்தில் பொருத்தி வைத்து, இலையுதிர் காலத்தில் பூமிக்கடியில் போய்விடுகிறதா என்று பாருங்கள். அது அவ்வாறு செய்யாது. ஆகவே, ஏதோ ஒரு வகை அறிவுத்திறனானது அங்கேயிருக்கிறது, அது தான், மரத்தின் உயிர்ச்சத்தானது மரத்தை விட்டு அகன்று, மரத்தின் வேரில் போய் தங்கியிருக்கும்படி செய்கிறது. அவ்வாறு அது செய்யாவிடில் மரம் மரித்து விடும். ஆகவே அதன் ஜீவன் காக்கப்படும்படி, அது வேரில் ஒளிந்து கொள்ளுகிறது. மரத்திற்கென ஒரு அறிவுத்திறன் கிடையாது. தேவனுடைய ஒரு பிரமாணம் தான் அதைச் செய்கிறது'' என்று நான் விளக்கினேன். ''நான் அதைக் குறித்து இந்த விதமாக சிந்திக்கவில்லை'' என்று அவர் கூறினார். நான் கூறியதாவது: ''மிஸ்டர், எந்த விவேகம் அம்மரத்தின் உயிர்ச்சத்திடம், குளிர்காலம் வரும் முன்னர் வேர்களில் போய் ஒளிந்து கொள்ளும்படி கூறுகிறதோ, அதே விவேகம் தான் அப்பெண்மணி யார் என்றும் என்ன சம்பவிக்கப் போகிறது என்றும் அவளிடம் கூறும்படி என்னிடம் கூறியது'' என்று கூறினேன். ''நீங்களா அந்தப் பிரசங்கியார்'' என்று கேட்டார். ''ஆம் ஐயா'' என்று பதிலளித்தேன் நான். அங்கே அவர் கிறிஸ்துவண்டை வழி நடத்தப்பட்டார். அதற்கு ஒரு வருடம் கழித்து, ஒரு கிறிஸ்தவராக, எண்பத்தைந்து வயதுடையவராக மரித்தார். 43பாருங்கள். தேவன் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார். தேவன் எவ்விடத்திலும் இருக்கிறார். நாம் இயற்கையை உற்று நோக்கினால். அங்கே நாம் அவரைக் காணலாம். இயற்கையில் உள்ள மரித்தல், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் யோபு அவரைக் கண்டு கொண்ட பொழுது, மனிதனுக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை'' ...மனுஷன் படுத்துக்கிடக்கிறான், (யோபு 14:12), அவன். ஜீவித்துப் போனபின் அவன் எங்கே? (யோபு 14:10) என்று அவன் கூறுகிறான். மரமானது பாவம் செய்யவேயில்லை என்பதைப் பாருங்கள். இயற்கை ஒரு போதும் பாவம் செய்யவேயில்லை. மனிதன் தான் பாவம் செய்தான். ஆகவே அவனால் இயலாமற் போயிற்று. பின்பு, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், இப்பொழுது வேதாகமமானது. அவர் தமது இரகசியங்களை தமது தீர்க்கதரிசிகளுக்குத் தெரியப்படுத்துகிறார் என்பதே எனது பொருளாகும். கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசிக்கு வருகிறது. அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், ...யோபின் சரித்திரத்தை நாம் அறிவோம். மனிதனின் வித்தானது குறைவுடையதாக பூரணமில்லாததாக இருக்கிறதென்றும், ஏனெனில் மனிதனின் தாயார் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியத் தவறிவிட்டாள் என்று தேவன் இறுதியாக யோபுவுக்கு விளக்கிக் கூறினார். அவள் தேவனுடைய வார்த்தையோடு ஒன்றைக் கலப்படம் செய்ய முயற்சித்தாள், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒன்றோடும் கலப்படம் செய்யப்பட இயலாத ஒன்றாகும். அது அவ்வாறுதான் உள்ளது. 44“...இயேசு இவ்வுலகில் இருக்கையில், கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த மலையைப் பார்த்து...'' (மத்தேயு 17:20) என்று கூறினார். அவர் கடுகு விதையைப் பற்றிக் குறிப்பிட்டார் கடுகு விதையை இனக்கலப்படம் செய்ய முடியாது. அது அசலான கடுகு விதையாக இருக்கிறது. அதை எதனோடும் இனக்கலப்படம் செய்ய முடியாது. அந்த அளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், என்று அவர் கூறினார். அதாவது தேவனுடைய வார்த்தையானது அவிசுவாசத்தோடு இனக்கலப்படம் செய்து கொள்ள முடியாது, அல்லது அதைக் குறித்து சந்தேகத்தோடு கேள்வி கேட்காது; ஓ, நான் பக்தி பரவசமடைகிறேன். நீங்கள் அதைக் குறித்து சந்தேகிக்க மாட்டீர்கள். சூழ்நிலைகள் எவ்வாறு இருந்த போதிலும், நீங்கள் தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்க மாட்டீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறவர்களாக இருக்கவேண்டும். ஏவாள் மாத்திரம் விசுவாசிக்க மாத்திரம் செய்திருப்பாளெனில், அவள் சரியானபடி பிள்ளைப்பேற்றை உடையவளாக இருந்திருப்பாள். ஆனால் அவளது கணவன் அவளைச் சேருமுன், அவள் கறைப்பட்டவளாக ஆகிவிட்டாள், யெகோவா செய்தது போல, இயேசுவுக்கு நேரிட்டது போல. அவளுடைய சிந்தையாகிய கருப்பையில் அசுசிப்படுதல் உண்டாயிற்று. தேவனுடைய வார்த்தைக்கு எதிராக, அவிசுவாசத்தின் வித்தை அவள் ஏற்றுக் கொண்டுவிட்டாள். ஏனெனில், அவள் மேலதிகமாக அறிவை விரும்பியபடியால், அவ்வாறே கூடுதலாக அறிவுடைய ஒன்றை அவளுக்கு அது பிறப்பித்துத் தந்தது. 45இன்றைக்கும் காரியம் அவ்வாறே உள்ளது. நான் பள்ளிக் கூடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். கல்வி நமது நாகரிகத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. கல்வியில்லாமற் போயிருந்தால், நாமெல்லாம் பேதமையுள்ளவர்களாக இருந்திருப்போம். கிறிஸ்த்தவமே நாகரிகத்தின் அடிப்படையாகவுள்ளது. முற்றிலுமாக அப்படிதான் உள்ளது. நாகரிகம் கிறிஸ்துவினால் வருகிறது. நிச்சயமாக அப்படித்தான். இப்பொழுது, தேவனுடைய வார்த்தையை அவிசுவாசத்தலோ அல்லது கூடுதல் அறிவைப் பெற அதனோடு எதையாவது கலப்படம் செய்யவோ செய்தால்... நீங்கள் அதனோடு எதையும் கலப்படம் செய்யமுடியாது. அது கலவாது. தேவன் அதை எழுதிய வண்ணமாகவே, அதை அவர் உரைத்த வண்ணமாகவே, நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும். அதனோடு எதையும் கூட்டவோ, அல்லது அதிலிருந்து எதையாவது எடுத்துப் போடவோ செய்யக் கூடாது. அது இருக்கிற வண்ணமாகவே நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும். 46இப்பொழுது, யோபு, ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், இறுதியாக அவனுக்கு தரிசனம் உண்டாயிற்று. அப்பொழுது, அவன், தேவன் எவ்வாறு மனிதனை மீண்டும் ஜீவிக்கும்படி செய்யப் போகிறார் என்பதைக் கண்டான் ஏனெனில் இன்னுமொரு உரைக்கப்பட்ட வார்த்தையை ஒரு கன்னிகை ஏற்றுக் கொள்வாள் என்பதாக இருந்தது. முதலில் ஏவாள் தான் அதை குறித்து சந்தேகித்தாள். மரியாளிடம் வார்த்தை வந்தபோது, அவள் அதை சந்தேகிக்கவில்லை. அவள் கூறினாள், “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது'' என்றாள் (லூக்கா1:38). ”'இப்பொழுது, நான் எனக்குள் அவ்வுயிர் அசைவாடுகிறதை நான் உணர்ந்து கொள்கிற வரையிலும் சற்று காத்திரும், பிறகு நான் போய் அதைப் பற்றி சாட்சி கூறுவேன்;அதைப் பற்றி நான் உறுதியாகத் தெரிந்து கொள்ளுகிற வரையிலும் சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள்'' என்று அவள் கூறவேயில்லை. கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் நாமும் அவ்வாறு தான் செய்கிறோம். நான் உறுதியாகத் தெரிந்து கொள்ளுகிற வரையிலும், காத்திருங்கள். நான் குணமாகிற வரையிலும் காத்திருங்கள். ஏதாவது ஒன்று சம்பவிக்கிறதை நான் காண்கிற வரையிலும் காத்திருங்கள், அப்பொழுது நான் அதைச் செய்வேன் என்று கூறுகிறோம். இல்லை ஐயா. அது பிரச்சினையல்ல நீங்கள் முதலாவதாக விசுவாசிக்க வேண்டும். 47ஒரு கைப்பிடியளவு மாவு மாத்திரம் உடைய அந்த பெண்மணியிடம் எலியா சென்று என்ன கூறினார்? ''...முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா, பின்பு... நீ தொடரலாம்'' (1 இரா. 17:13) என்று கூறினான். தேவனுடைய வார்த்தையை நீங்கள் முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். பின்பு அற்புதம் நிகழும். தேவனுடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கத் துவங்கு போது, அப்போது வார்த்தையின் பேரில் அற்புதமானது நிகழுகிறது. ஏனெனில் வார்த்தையானது வித்தாயிருக்கிறப்படியினால் அதுவே அற்புதத்தை பிறப்பிக்கிறது. ஆகவே, முதலாவதாக வார்த்தையை ஏற்றுக் கொண்டாக வேண்டும். வானத்திலிருந்து விதையின் மேல் மழை நீரானது விழுவது போல், பரிசுத்த ஆவியானவர் தன் ஜீவனைப் பொழிகிறார். தண்ணீர் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாக இருக்கிறது. மோசே வனாந்திரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினான், அதே விதமாக மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும். ஏன்? மக்கள் அழிந்து கொண்டிருந்தனர். வெண்கல சர்ப்பத்தை அவர்கள் உயர்த்தின பொழுது, அழிந்து கொண்டிருந்த மக்களுடைய ஜீவனானது காப்பாற்றப்பட்டது அவன் கன்மலையை அடித்த பொழுது... கிறிஸ்துவே அடிக்கப்பட்ட கன்மலையாயிருக்கிறார்; அவரிலிருந்து ஜீவத்தண்ணீர், அழியும் மக்களை காப்பதற்காக புறப்பட்டு ஓடிவருகிறது, நீங்கள் அதை விசுவாசித்து, அதன் பேரில் கிரியை செய்ய வேண்டும். இப்பொழுது 48இப்பொழுது நினைவில் வைத்திருங்கள்: பாவிக்கும் தேவனுக்கும் இடையே உள்ள பிளவில் நிற்கத்தக்க ஒருவரான அந்த நீதியுள்ளவர், அவர் ஒருவரே பிளவை நீக்கி இணைப்பை ஏற்படுத்தக் கூடியவராவார், அவரே அப்பரிபூரண வித்தானவராவார்; அவரது வருகையை யோபு கண்டபொழுது, ...இவ்வித்துக்கள் அழிவுள்ளவை, இவை பூமிக்கடியில் செல்வதை நான் காண்கிறேன் என்றான். அவனுடைய குமாரர்கள் அவனுக்காக அழுது புலம்பும்படி வருகிறார்கள், அவர்கள் உணருகிறதில்லை. அவன் படுத்துக் கிடக்கிறான், அவன் எழும்புவதேயில்லை. அவன் படுத்துக் கிடக்கிறான், அவன் சரீரம் அழுகிப் போகிறது, அது அவ்வளவுதான். அவன் குறைவுள்ள வித்தாக இருக்கிறபடியினால் அவன் எழும்புவதேயில்லை என்று அவன் கூறினான். தேவனுடைய வார்த்தைக்கு மீண்டும் பரிபூரணத்தைக் கொண்டு வருகிறவரை அவன் கண்டுபிடித்தபொழுது, அவரே பிளவை நீக்கி இணைப்பை ஏற்படுத்தி வழியை உண்டாக்குகிறவர் என்று கண்டான். அப்போது, அத்தீர்க்கதரிசி ஆவிக்குள்ளாகி, ''...என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.'' (யோபு 19:24, 25) என்று ஆர்ப்பரித்தான். அவன் அந்த பரிபூரணமானவர் வருகிறதைக் கண்டான். என்ன சம்பவித்தது? யோபு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், தேவனுடைய இரகசியங்கள் தீர்க்கதரிசிகளுக்கு தெரிந்தேயிருக்கிறது. அவன் வார்த்தையை உரைத்தான். அவனுக்கு தேவன் காண்பித்தபடியே அவன் வார்த்தையை உரைத்தபொழுது, அது உறுதிப்பாடான ஒன்றாக ஆகியது. ஏனெனில் அது உரைக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது. அது தன்னுடைய காலத்தில் அது உரைக்கப்பட்ட விதமாகவே நடக்கிறது. கிறிஸ்துவானவர் பிறந்தார்; மீட்பரான அவர், ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் நடுவில் நின்று, பிளவை நீக்கி இணைப்புண்டாக்கி, உயிர்தெழுதலைக் கொண்டு வந்தார். சரியாக அப்படியே செய்தார் ஏன்? அது தேவனுடைய வார்த்தையாக இருந்தது. இப்பொழுது அவர் வார்த்தையை உரைத்தார். வார்த்தை விதையாக இருக்கிறது; அது தன் பருவ காலத்தில் முதிர்ச்சியடைகிறது. சரியாக விதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தேவனுடைய வித்தும் முதிர்ச்சியடையும். 49இப்பொழுது மரியாளிடம் தேவன் ஒரு தூதனை அனுப்பி ''மரியாளே வாழ்க, ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீயே, ஒரு புருஷனை அறியாமலேயே நீ ஒரு குழந்தையைப் பெறுவாய்'' என்று கூறும்படி செய்திருந்தால், அப்பொழுது, மரியாள், தூதனிடம், “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள், நான் உங்களை ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்வேனாக; இது எவ்வாறு சம்பவிக்கும் என்பதை மருத்துவர் எனக்கு நிரூபித்துக் காண்பிப்பாராக: அப்பொழுது நான் உம்மை விசுவாசிப்பேன்'' என்று கூறியிருந்தால் என்னவாகியிருக்கும்? அது நிச்சயமாக சம்பவித்திருக்கவே செய்யாது. ஆனால் அவள் என்ன நிலையை அடைந்தாள்? அவளுடைய ஆவி வாசம் செய்த அவளுடைய இருதயமாகிய கருவிலே... உங்களுடைய ஆவியின் கருப்பை உங்களுடைய சிந்தை தான். உங்களுடைய சிந்தைதான் வாய்க்கால் ஆகும். உங்களுடைய சரீரத்தை ஆட்டிப் படைப்பது உங்களுக்குள்ள ஐம்புலன்களேயாகும். உங்கள் ஆத்துமாவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்காக உங்களுக்கு ஐம்புலன்கள் உள்ளன. மனச்சாட்சி, இன்னும் இன்னபிற. சரீரத்தில், பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல் ஆகியவை உள்ளன. ஆனால் ஆத்துமாவுக்குள்ளே போவதற்கு ஓரேயொருவழிதான் உள்ளது; அது தானே நீங்கள் ஒரு விதையாக இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கும். நீங்கள் ஆத்துமா, சரீரம், ஆவி என்பதாக இருக்கிறீர்கள்; பிறகு அதனுள் செல்வதற்கான ஓரேயொரு வாய்க்கால் அல்லது செல்லும் வழி ஒன்றுள்ளது. அது சுயாதீன ஒழுக்கமுறை செயற்பாடு (அதாவது, என்ன ஒழுக்கமுறையை நீங்கள் விரும்பி தெரிந்து கொள்கிறீர்களோ அதன் படி கிரியை செய்யவுள்ள சுயாதீனம் என்பதாகும் (Free Moral Agency) - தமிழாக்கியோன்). உள்ளதாக இருக்கிறது அதாவது, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதன்படியே தாராளமாக செய்து கொள்ளலாம் அதற்குரிய சுதந்திரம் உங்களுக்கு உண்டு; நீங்கள் ஏற்றுக் கொள்ளவோ அல்லது புறக்கணிக்கவோ எது வேண்டுமானாலும் செய்யலாம். 50ஆகவே, ஏவாளும் அதே அடிப்படையில் தான் இருந்தாள். அவள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, ''தேவன் இதைச் செய்யக் கூடாது என்று கூறினார், ஆகவே, இங்கிருந்து அப்பாலே போ“ என்று கூறவும் செய்யலாம். அதுவே - நன்றாக இருந்திருக்கும். ஆனால் இதற்குப் பதிலாக, அவள் சாத்தானின் பொய்யோடு அதை இனக்கலப்படம் செய்ய முயற்சித்து, அதினால் தனக்கு மரணத்தையே பிறப்பித்தாள். ஆனால் அது மரியாளிடம் வந்தபோது, அது வித்தியாசமாக இருந்தது. ”இதோ நான் ஆண்டவருக்கு அடிமை...'' என்றாள். (லூக்கா 1:38) “...இது எப்படியாகும்...? (லூக்கா 1:34). அது எப்படியாக ஆகப்போகிறது என்பது ஒரு பொருட்டல்ல. நீர் தேவனுடைய வார்த்தையைப் பேசியிருக்கிறீர்; அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. நான் அதை ஏற்றுக் கொள்ளுகிறேன்; ”இதோ நான் ஆண்டவருக்கு அடிமை; உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது. (லூக்கா 1:38) அதுவே காரியமாயிருந்தது; அது தான் தீர்வாயிருக்கிறது. அப்போது அவள் சரியான நிலையில் அமைந்திருந்தாள். அவள் ஜீவ உயிரணுவைப் பெற்றெடுத்தாள். அது தேவனுடைய வார்த்தையானது மானிட உருவங்கொண்டு பிரத்தியட்சப்படுத்தப்பட்டதாக இருந்தது. அநீதியுள்ள நம் ஒவ்வொருக்காகவும், நீதியுள்ள அந்த ஒருவருடைய மரணத்தினாலே அவர் நம் மரணத்திற்காக - நமது கடனைச் செலுத்தித் தீர்த்தார். அப்போது, நாம் அவரது வார்த்தையை ஏற்றுக் கொள்வதினால், ஜீவனைக் கொண்டுவருகிறது, கிறிஸ்துவை மீண்டும் நம்மில் திரும்பக் கொண்டு வருகிறது; ஏனெனில் கிறிஸ்துவானவர் வார்த்தையாயிருக்கிறார், உரைக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிறார். நீங்கள் ஏற்றுக் கொள்ளகூடுமானால், அப்போது முதிர்ச்சியடையும்; வியாதிப்பட்டிருக்கிற நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதை விசுவாசியுங்கள். அது தன் காலத்தில் முதிர்ச்சியடைந்தேயாக வேண்டும். 51இப்போது, நாம் யாவரும், கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை விசுவாசிக்கிறோம். விவேகமுள்ள எந்தவொரு மனிதனும், அவன் சுற்றிலும் கவனமாக பார்த்தாலும், இது இன்னும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்க முடியாது என்பதைக் காட்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் என்ன கூறுகிறேன் என்பதை உங்களுக்கு சுட்டிகாட்டுவதற்காக எனக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் தேவை. விபரமறிந்த எவரும், ஏதோ, ஒன்று சம்பவித்தேயாக வேண்டும் என்பதை அறிவர். அனைத்து வேத வாக்கியங்களும் அதைத் தான் சுட்டிக் காட்டுகின்றன. தேவனுடைய கணக்கில் ஆயிரம் வருடம் என்பது ஒரு நாள் என்று இருக்கிறது, ஆகவே, ஆயிரம் வருடம் என்பது ஒரு நாள் ஆகும்; இப்படியாக உலகமானது ஆறாயிரம் ஆண்டுகளில் சிருஷ்டிக்கப்பட்டது என்று நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். சிருஷ்டிப்புக்கு ஆறாயிரம் ஆண்டுகள் ஆயிற்று. அது சரிதான். ஆறு நாட்கள் என்று அது அழைக்கப்படுகிறது. ஒரு நாள் என்பது ஓராயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும். அல்லது ஓராயிரம் ஆண்டுகள் என்பது ஒரு நாள் என்று தேவனுக்கு இருக்கிறது என்றும் வேதம் கூறுகிறது. 52இப்பொழுது; முதல் இரண்டாயிரம் ஆண்டுகளிலே உலக ஒழுங்கானது, (உலக அமைப்பு) தன் முடிவை எட்டுகிறது,தேவன் அப்போது ஒன்றை அனுப்ப வேண்டியதாயிருந்தது. பரலோகத்திலிருந்து நியாயத்தீர்ப்பை அனுப்பி, பூமியை நியாயந்தீர்த்தார். நீதிமானாகிய நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் காப்பாற்றினார். இரண்டாவது இரண்டாயிரம் ஆண்டு முடிந்தபோது, அதேவிதமாக காரியம் சம்பவிக்கிறது. உலக ஒழுங்கானது, ஏன் சபை கூட மாசுபட்டிருந்தது. நோவாவின் நாட்களிலே, அவர்கள் அவனைக் கேலி செய்து எள்ளி நகையாடினர்; அவன் பேழையின் வாசலிலே நூற்றிருபது ஆண்டுகள் பிரசங்கித்தான். இரண்டாவது இரண்டாயிரம் ஆண்டுகள் முடிவடைந்த போது, சபையானது சிறையிருப்புக்குள் சென்றது, உலகத்தோடு வேசித்தனம் செய்தது, அதினால், அது வெறும் சடங்காச்சார, மதக்கோட்பாடுகளுள்ள குழுவாக மாறியது. 53இப்பொழுது, 1962 ம் ஆண்டு, வேதாகமம் என்ன கூறுகிறது? கடைசி நாட்களிலே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தமாக சீக்கிரமாக காரியம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று வேதாகமம் கூறுகிறது. வேதவாக்கியங்கள் பொய்யுரையாது. (மத்தேயு 24:22; ரோமர் 9:28). தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிமித்தமாக அப்படியாகும், அப்படியில்லாவிட்டால் மாம்சமான ஒருவரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். இப்போது நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதைக் காண்கிறோம். ஏழு என்பது இளைப்பாறுதலைக் குறிக்கும், அதுவே ஆயிரம் ஆண்டு அரசாட்சிக் காலமாகும். அவ்வாயிரம் ஆண்டு அரசாட்சி அப்போதுதான் சம்பவிக்கும். இப்போது, ஆனால் ஆறு நாட்கள் பூர்த்தியடைந்துவிட்டன. மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆயுதத்தை இப்போதே தன் கையில் வைத்திருக்கிறான். ஒரு நொடிப் பொழுதில் உலகத்தை தூள் தூளாக்கத் தக்கதாக உலகை அழிக்க அவனால் முடியும். வானவெளியில் ஒரு மனிதனை அவர்கள் அனுப்பி, சுற்றிவரச் செய்து, “சரண் அடையுங்கள், இல்லையேல், அவ்வாயுதத்தை வீசித் தாக்குவோம்” என்று கூறமுடியும். அவ்வளவுதான். அவன் என்ன செய்வான்? ஏன், புத்தியுள்ள எவரும், சரணடையத்தான் செய்வார்கள். அதன்பிறகு என்ன? இப்பொழுதும், பெரிய நாடுகள் சிறிய தேசங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருந்தன; இப்போதும் அவ்வாறு தான் காரியமானது இருக்கின்றது கவனித்தீர்களா?ஆகவே, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை கண்டு விசுவாசிக்கும் ஒரு நேரமாக ஆகியிருக்கிறது. 54இப்பொழுது, நாம் இவைகளைக் குறித்து மணிக்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம்; ஆனால் சற்று நேரம் வேத வாக்கியங்கள் சிலவற்றை நாம் உற்று நோக்குவோமாக. அவைகள் இக்கடைசி காலத்திற்கென விதைக்கப்பட்ட விதையை சுட்டிக் காண்பிக்கிறதாக இருக்கிறது. அவ்விதையானது அப்படியிருக்குமாயின்... யோபின் உரைக்கப்பட்ட வார்த்தை... ஏசாயா அதைக் குறித்துப் பேசினான், ஒவ்வாரு தேவமனிதனும், தேவனுடைய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் வரப்போகிற அந்த வித்து என்பவரைக் குறித்துப் பேசினர். தாவீது, ஏசாயா, எரேமியா இன்னும் ஏனையோருக்கும் தேவன் தமது இரகசியங்களை அறியும்படி செய்தார் உரிய பருவம் வரும்போது, அது அதே விதமாக இருக்கிறது. அது எப்போதும் அவ்வாறே இருக்கிறது அது ஒருபோதும் தவறாது. அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. அது நித்தியமானதாக இருக்கிறது. இயேசுவே தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார் என்று நாமனைவரும் அறிவோம். 55இப்பொழுது, அவருடைய வார்த்தையை நாம் எடுத்துக் கொள்ளுவோம். எபிரெயர் 1ம் அதிகாரத்தில், ''பூர்வகாலங்களில் பங்குபங்காகவும், வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் (கிறிஸ்து இயேசு) மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்...'' (எபிரெயர் 1:1, 2) என்று கூறப்பட்டுள்ளது. அவர் தேவனாயிருந்தார், ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசிதான் நிச்சயமாக. மோசே கூறியதாவது “... உங்கள் தேவனாகிய கர்த்தர்... ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார். (உபாகமம் 18: 15). ஆனால் இவரோ தீர்க்கதரிசியிலும் மேலானவர்; அவர் மாம்சத்தில் தோன்றிய தேவனாயிருந்தார். இப்பொழுது, இந்த தேவன் - தீர்க்கதரிசியானவர் இரண்டு அல்லது மூன்று அடையாளங்களை நமக்குத் தருகிறார், நாம் இங்கே அவைகளைக் காண விரும்புகிறோம். மகத்தான அடையாளங்கள் அவைகள், நாம் அவைகளை நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். மத்தேயு 24ம் அதிகாரத்தில், ''...இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?... உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன...“ (மத்தேயு 24:3). இதெல்லாம் எப்பொழுது சம்பவிக்கும்? சம்பவிக்கப்போகிற பல்வேறு காரியங்களை அவர் கூறினார். ''ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; இப்படியாக இன்னும் அநேக காரியங்கள் சம்பவிக்கும் என்று கூறினார்'', ”அத்திரமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள்... அப்பொழுது மற்ற எல்லா மரங்களும்...'' (லூக்கா 21: 29, 30; மத்தேயு24: 32) என்று கூறினார். 56இங்கே கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது, உங்களுக்கு நன்றி. நூறு சதவீதம் பேர்கள் உள்ளனர். நல்லது, இப்பொழுது இந்த கடைசிகால வித்தின் அடையாளம் என்ற செய்தியை நாம் கொண்டு வருகையில், மிகவும் கூர்ந்து கவனியுங்கள்... அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள்...“ என்று இயேசு கூறினார் (மத்தேயு: 24:32). இப்பொழுது அத்தி மரத்தை நீங்கள் கவனிக்கும் பொழுது... இப்பொழுது எதைப் பற்றிய உவமையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அத்தி மரத்தைப் பற்றித்தான். வேதாகமத்தைப் படித்து அறிந்திருக்கிற எவரும், அத்திமரமானது எப்போதும் யூத இன மக்களையே குறிக்கும் என்பதை அறிவர். “பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது...'' என்று யோவேல் கூறினான். (யோவேல் 1:4). அடிமரம் மாத்திரமே மீதியாக விடப்பட்டிருக்கிறது, ஏனெனில் மதக் கோட்பாடுகளும் அதைச் சார்ந்த இன்ன பிறவும் சபையைத் தின்று போட்டது. ஆனாலும், ''...திரும்ப அளிப்பேன்...'' என்று கர்த்தர் கூறுகிறார் (யோவேல் 2:25). இப்பொழுது, “யூதர்கள் வெட்டப்பட்டனர், இராஜ்யத்தில் புறஜாதியார் ஒட்ட வைக்கப்பட்டனர் என்று பவுல் நமக்குக் கூறுகிறார். ஆனால் கவனியுங்கள் அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று இயேசு கூறினார். (மத்தேயு24:32). இப்பொழுது அந்த மரம், யோபு கண்டது போல, அது மரித்தால் மீண்டும் பிழைக்குமா? நிச்சயமாக. இப்பொழுது, ''...அத்தி மரமும் மற்றெல்லா மரங்களும்... (லூக்கா 21:29,30) துளிர்க்கிறதை நீங்கள் காணும் போது...'' மரங்கள், எந்த விதமான மரங்கள்? அங்கே ஜீவ விருட்சம் ஒன்றுன்டு; அங்கே மத ஸ்தாபனக் கோட்பாடு மரம் ஒன்றுண்டு, தேசங்களின் கோட்பாடு ஒன்றுண்டு... அத்தி மரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள், அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது, வசந்த காலம் சமீபமாயிற்றென்று... நீங்கள் கூறுகிறீர்கள். (லூக்கா 21: 29, 30) அவைகள் கொப்புவிடும்போது, இலைகள் துளிர்க்கத் தொடங்குகிறது. தேசங்களைப் பற்றிய உவமையானது கூறப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். 57இப்பொழுது, தேவன் புறஜாதியாரோடு ஒரு மணவாட்டியை இங்கொன்றும், அங்கொன்றுமாகப் பிரித்தெடுக்க, இடைபடுகிறார். ஆனால் யூதரோடு ஒரு ஜாதி என்ற முறையில் ஒட்டு மொத்தமாக இடைபடுகிறார். தனிப்பட்ட நபர் என்ற ரீதியில் அல்ல. ஒரு தேசம் என்ற முறையில் தான் அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜாதியாக இருக்கிறார்கள் தேவன் அவர்களை ஒரு ஜாதியாகத் தெரிந்தெடுத்திருக்கிறார். மிஷனரிமார்கள் எருசலேமுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்படும் போது, அவள் ஒரு ஜாதியாக இரட்சிக்கப்படுவாள். ஓரே நாளில் பிறந்துவிடும் என்று வேதாகமம் கூறுகிறது. (ஏசாயா 66:8) அது சரிதான். ஆகவே, இஸ்ரவேல் மக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு ஜனக் கூட்டமாக கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்கள். தனிப்பட்ட நபர்களாக அல்ல. ஆனால், இப்பொழுது அவர் என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள். அதை நாம் எடுத்துக் கொள்வோமாக. அதை தெளிவாகக் கவனியுங்கள். ''...அத்தி மரமும், மற்றெல்லா மரங்களும்... துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது...'' (லூக்கா 21:29, 30). 58இப்பொழுது ஒவ்வொருவரும் மறுமலர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றனர். அல்லது ஏற்கனவே மறுமலர்ச்சியடைந்து விட்டனர். யூதர்கள் ஒரு ஜாதியாக தங்களுடைய சுயதேசத்திற்கு திரும்ப வந்து விட்டார்கள் தங்கள் சொந்தக் கொடியை பறக்கவிட்டிருக்கின்றனர். அவர்களுடைய சொந்த அரசாங்கம் அமைத்துவிட்டது; அவர்களுடைய சொந்த நாணயத்தை உடையவர்களாக இருக்கின்றனர். நான் கருதுகிறதென்னவெனில் 1800 ஆண்டுக் காலத்தில் இப்பொழுது தான் முதல் தடவையாக அவர்களுக்கு என்று ஒரு தேசம் ஏற்பட்டுள்ளது. அதற்கும் மேலாக இருக்கும், ஓ, 2,200 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும்; சுமார் 2,200 ஆண்டு காலத்திற்குப் பிறகு, இஸ்ரவேல் மீண்டும் ஒருதேசமாக மலர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகமிகப் பழமையான ஆறு முனைகள் கொண்ட தாவீதின் நட்சத்திரம் பொறித்த அக்கொடி, 2,200 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு மீண்டும் பறக்கவிடப்பட்டிருக்கிறது. அவள் துளிர் விடும்போது, நேரமானது வாசலருகே வந்துவிட்டது என்று இயேசு கூறினார். இஸ்ரவேலராகிய யூதர்களைப் பற்றிக் கூறுகிறார். 59இப்பொழுது கவனியுங்கள். மற்றெல்லா மரங்களும் துளிர் விடும்போது என்று அவர் கூறினார். ரோமன் கத்தோலிக்க சபையானது மகத்தான வேகமான முன்னேற்றத்தை, அது இது வரையிலும் பெற்றுள்ளதை விட அதிகமாகப் பெற்றுள்ளது. ப்ராடெஸ்டெண்ட் சபையும், அது இதுவரையில் பெற்றுள்ளதை விட மேலதிகமாக தன் எழுப்புதலைப் பெற்றுள்ளது. பில்லி கிரகாம், ஜேக் ஷீலர் போன்றோரும், பெந்தேகோஸ்தேயினரும் இதுவரை இல்லாத அளவுக்கு எழுப்புதலைப் பெற்றிருக்கின்றனர். ஓரல் ராபர்ட்ஸ், டாமி உறிக்ஸ், ஏனைய மகத்தான மனிதர்களும் ஒரு எழுப்புதலைப் பெற்றிருக்கின்றனர். கவனியுங்கள். வல்லரசுகள் எழுப்புதலைப் பெற்றிருக்கின்றனர், நாடுகளின் வல்லரசுகள், இப்பொழுது, ஒரு எழுப்புதலானது நடந்து கொண்டிருக்கிறது. யார் மிகப் பெரிய வல்லரசாக இருக்கப் போகிறது? கம்யூனிசமா? “ஓ, நாம் கம்யூனிசத்தைப் பற்றி அஞ்சுவோமாக'' என்று ஒவ்வொரு பிரசங்கியாரும் பிரசங்கபீடத்தில் ஏறி முழங்குவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது அபத்தமானது. உலகை கம்யூனிசம் தான்ஆளப்போகிறது என்று கூறுகிற ஒரு வேத வாக்கியத்தைக் காண்பியுங்கள் பார்க்கலாம். ரோமானியக் கொள்கைதான் உலகை ஆளப்போகிறது, கம்யூனிசம் அல்ல... கர்த்தருடைய வார்த்தையினால் நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்ட சொப்பனத்தை கவனியுங்கள். பொன்னால் ஆனதலை, வெண்கலம், அப்படியே கீழே பாதத்திற்குப் போனால் அது இரும்பாயுள்ளது, ஒருபோதும் அது மாறவேயில்லை. அது இரும்பாக இருக்கிறபோது தான், கல்லானது வந்து மோதி நொறுக்கியது. முடிவில் பெலவீனமான களி மண்ணும், இரும்பும் ஒன்றாகக் கலந்திருந்தது என்பதை நினைவில் வைத்திருங்கள். 60சமீபத்தில் அவர்கள், குருஷ்சேவ் - ஐசன் ஹோவர் இடையே, நடத்திய அம்மாபெரும் கூட்டம் நடந்தது. குருஷ்சேவ் என்ற பெயருக்கு அவருடைய சொந்த தேசத்தின் பாஷையில் என்ன அர்த்தம் தெரியுமா?குருஷ்சேவ் என்றால், களிமண் என்று அர்த்தமாம். ஆங்கிலத்தில் ஐசன் ஹோவர் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? இரும்பு என்பதாகும். காரியமானது என்னவாக இருக்கிறது என்பதை மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கும் விதத்திலே, குருஷ்சேவ் தனது பாதரட்சையைக் கழற்றி எடுத்து அதை மேசையின் மேல் அடித்தார். அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துப் போகமாட்டார்கள். யார் அரசாளப் போகிறார்கள்? ரோமாபுரி தான் ஆளப் போகிறது. சபைகளின் சமஷ்டி அமைப்பு, கத்தோலிக்க மார்க்கத்தோடு ஒன்றாகப் பிணைபட்டுவிடும், அதினால், ஆளுகிற வல்லமை அங்கே உண்டாகிறது. வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. தவறாத வித்தாக அது இருக்கிறது. 61இப்பொழுது, இன்றைக்குக் கவனியுங்கள். இந்த புதிய போப் பிராடெஸ்டெண்ட் சபைகளை இணையும்படி அழைக்கவில்லையா? அவர்களும் அதற்காகப் போகவில்லையா? பெந்தேகோஸ்தேயினரே உங்களைப் பற்றி என்ன? அதே காரியம் தான். சபைகளின் சமஷ்டி அமைப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வித்தானது நிச்சயமாக நிறைவேறியேயாக வேண்டும். இது சம்பவித்தேயாக வேண்டும். அது முதிர்ச்சியடைந்தேயாக வேண்டும். அது முதிர்ச்சியடைவதற்கான வேளை வந்துவிட்டது. ஜனங்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஸ்தாபன அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, மேலும் மேலும் பெரிய கட்டிடங்களைக் கட்டிக் கொண்டே போகிறார்கள்; இன்னும் பெரிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டே போகிறார்கள். என்னவெல்லாம் சம்பவித்துள்ளன? வேதாகமம் அவர்கள் என்ன செய்வார்கள் என்று கூறியதோ அதேவிதமாக அதே காரியம்தான் சம்பவித்துள்ளது. அதைத்தான், தேவன் - தீர்க்கதரிசியாக இருக்கிற இயேசு கிறிஸ்துவும், அவ்வாறே சம்பவிக்கும் என்று முன்னுரைத்திருக்கிறார். யூதர்கள் திரும்ப தங்கள் சுயதேசத்திற்கு வருவார்கள் என்றும், அவர்கள் மத்தியில் பெரிய புத்தெழுச்சி, ஒருதேசம் என்ற முறையில் ஏற்படும் என்றும், அவர்கள் ஒரு தேசிய இனமாக ஒன்றாகக் கூடுவார்கள் என்றும் கூறினார். மெதோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்ட்டுகள், பிரெஸ்பிட்டீரியன்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் ஏற்படும், பெந்தேகோஸ்தேயினர் மத்தியில் ஒரு எழுப்புதல் ஏற்படும், அது அவ்வாறே ஏற்பட்டும் விட்டது. ஜாதிக்கு விரோதமாக ஜாதி சண்டையிடும், வித்து முதிர்ச்சியடைந்துவிட்டது. இஸ்ரேல் 2,200 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தேசமாக ஆகிவிட்டது. என்ன சம்பவித்திருக்கிறது? சபைகள் யாவும் எழுப்புதல் அடைந்து ஒன்று சேர்ந்துவிட்டன. அது சரி தான் ஐயா. 62இப்பொழுது, இன்னொரு மகத்தான வித்தானது விதைக்கப்பட்டது. 2 தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில் கடைசி நாட்களில் சபையின் மத்தியில் வேதாகம விசுவாசத்தைவிட்டு வழுவிப்போகுதலானது ஏற்படும் என்று அவர் கூறினார். அது சரிதான். அது ஒரு வித்தா? அது ஒரு வாக்குத்தத்தமா? அவர்களை இன்று பாருங்கள். நம்முடைய சபைகளைப் பாருங்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் மத ஸ்தாபனமாக ஸ்தாபிதம் செய்து கொண்டிருக்கிறார்கள். வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள்; வேதாகமத்தை விசுவாசிக்கவில்லை; உண்மையான சத்தியமான தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கவில்லை. ''வேதாகமம் இவ்வாறு கூறுகிறதா?'' என்று நீங்கள் கேட்கிறீர்கள். “அவைகள் கடந்த கால விஷயங்கள். அவ்விதமான காரியம் ஒன்றும் இல்லை. ஓ, அப்படிப்பட்டதொன்று இல்லவே இல்லை. அற்புதங்களின் காலம் நீண்ட காலத்திற்கு முன்பே கடந்து போய்விட்டது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஒன்றே இல்லை. அது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு உள்ள சிலருக்கு மாத்திரமே உரியது, அப்போஸ்தலராகிய பனிரெண்டு பேர்களுக்கு மாத்திரமே உரியது'' என்றெல்லாம் கூறுகிறார்கள். பாருங்கள். அது என்ன வித்து? அது முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. அதுவே கடைசிகால வித்தின் அடையாளமாயிருக்கிறது. இயேசு என்ன கூறினார்? ''இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது, உங்கள் (சபைக்கு) மீட்பு சமீபமாயிருப்பதால் நீங்கள் நிமிர்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள்...'' என்று கூறினார். (லூக்கா 21:28) அவள் வீழ்ச்சியடைவாள் என்பதைப் பார்த்தோம். அவ்வாறே நடந்துள்ளது என்பதை நாம் காண்கிறோம். அது சரிதான். 63இப்பொழுது கடைசி நாட்களில் நடக்கப் போவதைப் பற்றி யோவேல், அதே அதிகாரத்தில் இன்னொரு பாகத்தில், அதே பருவத்தில் முன்மாரியும் பின்மாரியும் பொழியப்படப் போவதைப் பற்றி கூறியுள்ளதைக் குறித்து நாம் கூறினோம். கிறிஸ்தவர்களில் எத்தனை பேர்கள் அதைப் பற்றி அறிந்துள்ளீர்கள்? “ஆமென்” என்று கூறுங்கள். நிச்சயமாக. அன்றொரு நாள் நான் அதைப் பற்றி ஆராய்ந்தபொழுது, எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. முன்மாரியும் பின்மாரியும் ஓரே பருவகாலத்தில் ஏற்படுகிறது. உங்களுடைய எபிரெய மொழி அகராதியை எடுத்துப் பாருங்கள்; அதில் “முந்தைய” (FORMER) என்ற வார்த்தைக்கு உரிய எபிரெய பதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; அது, “மெளரே'' (MOWREH) என்பதாகும். மெளரே என்ற வார்த்தைக்கு ”போதித்தல்'' என்று அர்த்தமாம். என்ன நடைபெற்றிருக்கிறது? நல்லது, போதித்தலாகிய மழையானது நடைபெற்றுக் கொண்டு இருந்திருக்கிறது என்று நாம் கண்டுகொண்டோம். பாப்டிஸ்டுகள், “44 - களில் இன்னும் ஒரு மில்லியன் மக்களை கூடுதலாக சபை உறுப்பினர்களாக்க வேண்டும் என்பது அவர்களுடைய குறிக்கோளாயிருந்தது. நமது மகத்தான சுவிசேஷகர் பில்லிகிரகாம் அவர்களுடைய மகத்தான எழுப்புதல்களைப் பாருங்கள். அவர் என்ன செய்தார் என்று பாருங்கள்? ஓரல் ராபர்ட்ஸ் அவர்களையும், பெந்தேகோஸ்தேயினரையும் பாருங்கள். போதித்தலாகிய மழையானது புறப்பட்டுச் சென்றது. தேசிய இனங்களில் போதித்தலாகிய மழையானது ஏற்பட்டது; கம்யூனிஸம் மக்களிடையே விதைக்கப்பட்டது, ஒவ்வொரு தேசத்திலும். ரோமாபுரியின் எழுப்புதலும் ஏற்பட்டுள்ளது. என்ன சம்பவிக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பெர்லினின் மேற்கத்திய பாகத்தை அல்லது கிழகத்திய பாகத்தை அவர்கள் திரும்பக் கொடுக்கும்போது, அது கம்யூனிசத்தை... வைக்கிறது, நான் கூறுவது என்னவெனில், இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ரோமாபுரியானது உலகின் மேல் தன் மேலாதிக்கத்தை பெற்றிருந்ததோ, சரியாக அதே போல் இப்பொதும் தனது பழைய வட்டத்திற்குள் புத்தெழுச்சி பெற்று எழுப்பி வந்துவிடும் நிச்சயமாக அவ்வாறே நடக்கும். முழுவதுமாக அவ்வாறே நடக்கும் (தீர்க்கதரிசி கூறினது போலவே ஜெர்மனியின் கிழக்குப் பாகமானது 1987-இல் திரும்ப மேற்கு ஜெர்மனியிடம் கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு சேர்ந்து கொண் டது. அப்போது பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் ஒன்றாக இணைந்தன- தமிழாக்கியோன்). 64அங்கே ஒரு எழுப்புதலானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது என்ன? ஒரு விதைத்தல் நடைபெறுகிறது. பில்லிகிரகாமைப் பற்றி முன்னைப் போல் அதிகமாக நீங்கள் கேள்விப்படவில்லை. அப்படியிருக்கவில்லையா? ஓரலைக் குறித்து என்ன? ஏனையோரைக் குறித்து என்ன? மகத்தான எழுப்புதல் அக்கினியானது இப்பொழுது எரிந்து கொண்டிருக்கவில்லை? அது என்ன? அதுவே கடைசி கால வித்தின் அடையாளமாயிருக்கிறது. வார்த்தைகள் விதைக்கப்பட்டுள்ளன. அதுஎன்ன? ஸ்தாபனமானது ஸ்தாபனத்தைத் தான் அறுவடை செய்யும். அது அவைகளை ஒரு சமஷ்டி அமைப்பாக ஒன்றுபடுத்திவிடும். ஆனால் தேவனுடைய வார்த்தையும் கூட விதைக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய ஆவியானவர் மழையாகப் பொழியும் போது, தேவனுடைய வார்த்தையானவர் மக்களிலே வாசம் பண்ணுவார். அங்கே விபச்சாரம் செய்த கள்ள மணவாட்டி மதக் கோட்பாடுகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டு, தன்னுடைய சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப் போட்டாளே, அவள் எதை அறுவடை செய்வாள்? சபைகளின் ஒரு சமஷ்டி அமைப்பையே அவள் அறுவடை செய்வாள். அதுவோ, முட் செடிகளும், முட்பூண்டுகளும் சுட்டெரிக்கப்படுவதுபோல, ஒன்றாக கட்டி சுட்டெரிக்கப்படுவாள். ஆனால் எந்த மக்களுடைய இருதயங்களில் தேவனுடைய வார்த்தையானது விதைக்கப்பட்டிருக்கிறதோ, அது, நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமானதாக இருக்கிறதோ அதே போல நிச்சயமாக, கிறிஸ்துவின் மணவாட்டியை அறுவடை செய்வார்கள். கடைசி காலத்தின் அடையாளங்கள். 65தேவனுடைய சபையே, காரியம் எப்படியுள்ளது? நம்மைப் பற்றிய காரியம் என்ன? பாப்டிஸ்டுகளே, ப்ரெஸ்பிட்டீரியன்களே, அசெம்ப்ளிஸ் ஆஃப் காட் சபையினரே, இயேசு மாத்திரம் சபையோரே, இன்னும் ஏனையோரே, உங்களைக் குறித்து என்ன? நம்மைப் பற்றிய காரியம் என்ன? உங்களால் காண முடியவில்லையா? வித்தானது. நீங்கள் காணவில்லையா? உங்களுடைய இருதயமாகிய கருப்பையிலே, என்னவிதமான வித்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். மதக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். பின்மாரியைக் குறித்து மக்கள் மிகவும் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின்மாரி சபை சகோதரர்களே உங்களை அவமதிப்பாக நான் பேசவில்லை. ஆனால் அது பின்மாரி அல்ல. (பின்மாரி சபை என்ற ஒரு சபை உள்ளது. அதைக் குறித்துத்தான் சகோ. பிரான்ஹாம் அவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள் - தமிழாக்கியோன்). பின்மாரியானது இங்கே வந்திருக்குமானால், தேவனுடைய வல்லமையானது வல்லமையாக அடித்து, பூமியிலே தீவிரமாக வந்து பரவியிருக்கும். பின்மாரியானது வரவிருக்கிறது. என்ன நடக்கிறது? ஏவாள் செய்ய முயற்சித்தது போலவே, சபையும் தனக்கென எதையோ உற்பத்தி செய்து கொண்டிருக்கிறாள். எதையோ உற்பத்தி செய்ய அவளுக்கு இன்னும் அதிகமான வெளிச்சத்தை அவள் பெற்றுக் கொள்ள முயற்சித்தாள். நாமும் அதையே செய்திருக்கிறோம், நம்மைக் கொண்டே எதையோ ஒன்றை உண்டாக்கிக் கொள்ள நாமும் முயலுகிறோம். உங்கள் கரங்களை அதை விட்டு அகற்றுங்கள். தேவன் அதை செய்யட்டும். அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு, அதை விசுவாசியுங்கள். அதை உங்கள் இருதயத்தில் காத்துக் கொள்ளுங்கள். மழையானது பொழிய ஆரம்பிக்கும் போது, ஜீவனானது அதைப்பற்றிக் கொள்ளும், அப்போது, வார்த்தையானது தன்னையே பிரத்தியட்சப்படுத்தும். 66நான் பைத்தியம் பிடித்தவன் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று நான் அனுமானிக்கிறேன். ஆனால் அவ்வாறில்லை. என்னை விட்டுவிடுங்கள். இவ்விதமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். சபையின் காரியம் எவ்வாறுள்ளது? அவளுடைய கருப்பையாகிய திறந்த சிந்தையிலே, அவள் தேவனுடைய வார்த்தையை அல்ல, எல்லாவிதமான மதக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். கிறிஸ்து வருகிற போது, ஆதாம் எவ்வாறு கண்டு கொண்டானோ அதே போல அவரும் கண்டு கொண்டார். யேகோவாவும் அவ்வாறே கண்டார். இங்கே அவைகளின் அடையாளங்கள் தோன்றிவிட்டன, கடைசி காலம் தோன்றிக் கொண்டிருக்கிறது. சபைக்கோ, உரிய விடை கிடைக்கவில்லை. அது சரிதான். இதுவே வேளை. முன்மாரி கடந்து சென்றுவிட்டது. அதனால் தான் பில்லியினால் (பில்லி கிரகாம் - தமிழாக்கியோன்) அதிகம் செயல்பட முடியவில்லை. நினைவில் வைத்திடுங்கள், அங்கே இருந்தது... 67“சோதோமின் நாட்களில் நடந்தது போலவே மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்'' என்று இயேசு கூறினார். சோதோமியர்களிடத்தில் இரண்டு தூதர்கள் சென்றனர். லோத்து ஆபிரகாமோடு நடந்தான். சபையானது ஒரு சமயம் கிறிஸ்துவின் ஐக்கியத்திலே, வார்த்தையோடு கூட நடந்தது. ஆனால் அவர்களோ, ஸ்தாபனத்திற்காக, தங்களுடைய சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்டார்கள். இப்பொழுது, அவள் முழுவதையும் விற்றுப்போட்டு, ஒரு பெரிய சபையின் சமஷ்டி அமைப்பாக ஸ்தாபிதம் செய்து கொள்வதற்காக அப்படி ஆகிவிட்டாள். லோத்துக்கும் அதே தான் நடந்தது. அவன் அங்கே சென்றான். இரண்டு தூதர்கள், இந்நாட்களில் ஓரல் ராபர்ட்ஸ் ஒரு பில்லிகிரகாம் எவ்வாறு இந்நாளுக்கென இருக்கின்றார்களோ அதைப் போலவே, அவர்கள் இருவரும் அங்கே சென்றார்கள். அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கொடுத்தனர். என்ன சம்பவித்தது? அதைவிட்டு அவமானம் தான் வெளியே புறப்பட்டு வந்தது. 68ஆனால் ஆபிரகாமோ... அவனோடு ஒருவர் தனித்து நின்று விட்டார். அவரை அவன் தேவனே என்று அழைத்தான். அவர்களுக்கு முன்பாக அவர் நடப்பித்த அவ்வடையாளமானது, அது என்ன செய்தது? அவர் யார் என்பதை நிருபித்தது. ஆபிரகாம் தெரிந்து கொள்ளப்பட்டவனாயிருந்தான். ஏனெனில் அவன்... ஆபிரகாம் வாக்குத்தத்ததைப் பெற்றான். இப்பொழுது கவனியுங்கள், இது ஆபிரகாமின் வித்தாயிருக்கிறது. வாக்குத்தத்தமானது ஆபிரகாமுக்கு மட்டும் ஏற்படவில்லை; ஆனால் அவனுடைய வித்துக்கும் அளிக்கப்பட்டது. (இந்த இடத்தில் தமிழ் வேதாகமத்தில், SEED என்ற ஆங்கில பதத்திற்கு சந்ததி என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. வித்து, சந்ததி இரண்டும் ஒன்றுதான் - தமிழாக்கியோன்) அவனுடைய வித்தாகிய ஈசாக்கு அல்ல, அது தோல்வியுற்றது. அவ்வாறு ஆயிற்று என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த வித்தோ... அது அவனுக்கிருந்த விசுவாசமேயாகும். சூழ்நிலைகள் எவ்வாறு இருந்த போதிலும் சரி, அது இயற்கைக்கு எவ்விதம் எதிராக இருந்த போதிலும், மருத்துவர் அதைக் குறித்து அவ்விதம் நடக்காது என்று சொன்ன போதிலும் கூட, ஆபிரகாம், தனக்கு அவ்வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட பிறகு, அது இயலாத ஒன்று என்ற போதிலும், அவன் விசுவாசம் கொண்டிருந்தான். 69அவன் தனது சகோதரியை, பதினேழு வயது மதிக்கத்தக்க தனது ஒன்று விட்ட சகோதரியை மணந்து கொண்டான். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. அவள் அறுபத்தைந்து வயதும், அவன் எழுபத்தைந்து வயதும் அடைந்தபோது தேவன் அவனுக்கு தரிசனமானார். உனக்கு அவளால் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்று அப்போது கூறினார். ஏன், அவன் அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்டான். அவன் அதற்காக ஆயத்தப்பட்டான். இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து ஒன்றும் சம்பவிக்கவில்லை. இப்பொழுது அவன் நூறு வயதுடைவனாய் இருந்தான். அவளோ தொண்ணூறு வயதுடையவள். அது அவனை ஒரு இம்மி கூட அசைக்கவில்லை. ''தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்...'' இருந்தான் (ரோமர் 4:20). அதுவே விசுவாசமாயிருக்கிறது. அதுவே ஆபிரகாமின் இராஜரீக வித்தாயிருக்கிறது. அந்த விதமான வித்து தான் தேவனுடைய வார்த்தையை - ஏற்றுக் கொள்ளுகிறது. அதுதான் மணவாட்டியை பிறப்பிக்கக் கூடியதாக இருக்கும். அதுவே கிறிஸ்துவை சந்திக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அவரே வார்த்தையாயிருக்கிறார். 70தேவனுடைய வார்த்தையைத் தவிர, வேறு எந்த ஒன்றினாலும் சபை விதைக்கப்பட்டிருந்தால், அதனால் அவரைச் சந்திக்க இயலாமற் போகும். மனம் போன போக்கில் நடக்கும். காளான் முளைத்த சரீரம் அவருக்கு இல்லை. அவருக்கு பரிபூரணமான சரீரமே உண்டு, அவரே பரிபூரண வார்த்தையாயிருக்கிறார். சபையில் வார்த்தையானது விதைக்கப்பட்டு, அது பரிபூரண வார்த்தையில் விசுவாசம் கொண்டிருக்கும். பரிபூரண வார்த்தையும், பரிபூரண வார்த்தையும் ஒரே மாமிசமாகவும் ஒரே சரீரமாகவும், கணவன் மனைவியாக ஒன்றாக இணையும். ஆமென். நான், எனக்கு ஆமென் என்று கூறவில்லை. ஆனால் ஆமென் என்பதற்கு, அவ்வாறே ஆகட்டும் என்று அர்த்தமாம். எப்படியாயினும் நான் அதை விசுவாசிக்கிறேன். ஆம் ஐயா. முன் மாரியானது பொழிந்து முடிந்துவிட்டது. மழையானது பொழிவதற்கு ஆயத்தமாயுள்ளது அது எதைப் பிறப்பிக்கப் போகிறது? நீங்கள் அதைக் கவனியுங்கள். 71இன்னுமொரு அடையாளம்: புத்தியில்லாத கன்னியரை பற்றியது. ஓ, இயேசு கூறினார், மணவாளன் வருவதற்கு முன்னர், அநேக புத்தியுள்ள கன்னியரும், புத்தியில்லாத கன்னியரும் இருப்பார்கள் என்று, ஒரு நாளிலே, புத்தியில்லாத கன்னியர் விழித்தெழுந்து, தன் தீவட்டியில் எண்ணெய் இல்லை என்பதை கண்டு கொள்ளுவாள். அப்பொழுது, ''இதோ மணவாளன் வருகிறார்'' என்ற சப்தம் புறப்பட்டுச் செல்லும். (மத்தேயு 25:1-13). இப்பொழுது அச்சப்தம் தான் நடந்து கொண்டிருக்கிறது. ''கிறிஸ்து வருகிறார்'' அவள் விழித்தெழுந்து தன்னிடம் எண்ணெய் இல்லை என்பதைக் கண்டு கொண்டாள். எண்ணெய் என்றால் ஆவி என்று அர்த்தமாம். ஆவியே, வார்த்தையை உயிர்ப்பிக்கிறது. ஆவியே வார்த்தையை உயிர்ப்பிக்கும் தண்ணீராயுள்ளது. அதை வெளியே எறிந்துவிடுங்கள். ''நல்லது, இந்த சபைகளைக் குறித்து என்ன? என்று நீங்கள் கேட்கலாம், அவர்கள் ஸ்தாபன வித்தை விதைத்தால், அது அதையும் கூட உயிர்ப்பிக்கும். தேவனுடைய ஆவி அதையும் உயிர்ப்பிக்கும். 72“...நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார். (மத்தேயு 5:45). எபிரெயர் 6ம் அதிகாரம் கூறுவதென்னவெனில் மழையானது பூமியின் மேல் பயிரை முளைப்பிக்கத் தக்கதாக அடிக்கடி பெய்கிறது என்று. முட்செடிகளும், முட்பூண்டுகளுங்கூட தன் மேல் பெய்யும் மழையைக் குடித்து, அவைகளுங்கூட களி கூருகின்றன. ஆனால் ''அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்...” (மத்தேயு7:16). அது சரியாக அவ்வாறே இருக்கிறது. அது அப்படிதான் உள்ளது. அவர்கள் அதைக் கண்ட போது... பாருங்கள், கனிகள் சேர்க்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. மழையானது பொழியப்பட ஆயத்தமாயுள்ளது. ஸ்தாபனமானது ஸ்தாபனத்தையே பிறப்பிக்கும். அது அவ்வளவுதான். ஆனால் வார்த்தையோ, கிறிஸ்துவை - மணவாட்டியைப் பிறப்பிக்கும். நிச்சயமாக. வார்த்தை என்னும் வித்தை விதையுங்கள். இப்பொழுது, புத்தியுள்ள கன்னிகையோ 73''கிறிஸ்தவ வியாபாரிகளின் சப்தம்“ என்று பத்திரிக்கையை கவனித்தீர்களா? சர்வதேச ரீதியில் நான்அவர்களுக்காக பிரசங்கிக்கிறேன். அவர்களுக்காக நான் கடிந்து கொள்ளாமல் இருக்கமுடியாது. இது வார்த்தையாயிருக்கிறது. பாருங்கள். பிரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபாலியன்கள், இன்னும் நூற்றுக்கணக்கான அவர்களைச் சார்ந்த அநேகர் எங்கிலும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள தேடிக் கொண்டு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மகத்தான பெரிய அளவில் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து உள்ள விலையேறப்பெற்ற எனது ஊழியக்கார நண்பர் ஒருவர் உண்டு. அவர் அருமையான மனிதர், தெய்வீக மனிதர், நான்அவரிடம், ''உங்களுடைய ஊழியமானது என்ன? அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டேன். “நான் பாபிலோனை உள்ளே கொண்டு வர வேண்டியவனாய் இருக்கிறேன்'' என்றார். அப்பொழுது, நான், “உங்களால் காண முடியவில்லையா? புத்தியில்லாத கன்னியர், தங்களுடைய வித்துக்கள் வளருவதற்கு கொஞ்சம் எண்ணெய் வேண்டுமென்று தேடுகிற அதே சமயத்தில் தான், அந்த வேளையில்தான், கிறிஸ்து வருகிறார் என்றும், அவள் கைவிடப்படுகிறாள் என்றும் உள்ளதை உங்களால் காண முடியவில்லையா என்று எனக்குள் நினைத்தேன். சமீபத்தில் மகத்தான பிரசங்கியார் பில்லிகிரகாம் அவர்கள், நமக்கு பெந்தேகோஸ்தே தேவையாயிருக்கிறது. மக்களுக்கு மீண்டும் அது தேவையாயிருக்கிறது என்று கூறினார். எபிஸ்கோபாலியன் சபையைச் சேர்ந்தவர்கள் ஒரு பெரிய கட்டுரையை எழுதினார்கள், அதில், ''நமக்கு அன்னிய பாஷைகளில் பேசும் பிரசங்கிமார்கள் தேவை, சுகமளித்தல் ஆராதனைகளை நடத்தும், தெய்வீக சுகமளித்தல் வரம் பெற்றவர்கள் நமது சபையில் தேவை, ”வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறவர்கள் நமக்குத் தேவை'' என்று எழுதியுள்ளார்கள். அவர்கள் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் விளக்குகளில் எண்ணெயைப் பெற முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியே தான் நடக்கிறது. அது ஒரு கடைசி கால வித்தின் அடையாளமாயிருக்கிறது. ஆமென். அவள் அவ்வாறு செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கையில், மணவாளன் வருகிறார், அவரோடு மணவாட்டி உள்ளே செல்கிறாள், இவளோ அடைக்கப்பட்ட கதவுக்கு புறம்பே இருக்கிறாள். ஓ, எப்பேர்ப்பட்ட அற்புதமான நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 74இன்னுமொரு காரியத்தை நான் கூற விரும்புகிறேன். தேசங்களுக்கிடையே இக்கட்டும் துன்பமும் ஏற்பட்டுள்ளது; வானங்களிலே பயத்தை ஏற்படுத்தும் காட்சிகள், அது அவ்விதமாக உள்ளது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கவனியுங்கள், அவற்றில் இரண்டை நாம் எடுத்துக் கொள்வோம். ஒன்பதரைமணி ஆவதற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் நமக்கு உள்ளனவா? அதற்கு மேல் இவ்வரங்கத்தினை நான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இம்மக்கள் நமக்கு இதை அளித்திருப்பது கிருபையே. செவிகொடுங்கள். எத்தனை பேர்கள்... நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்கள். சமீபத்தில் தேசமானது அடையாளங்கள் நிமித்தமாக அசைந்துவிட்டது. விண்வெளி வீதியில் சுற்றி வந்த இம்மனிதன் என்னத்தைக் கண்டான் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவன் இதுவரை கண்டிராத காட்சிகளைக் கண்டான். அவைகள் என்னவென்று விஞ்ஞானத்திற்குக் கூடத் தெரியாது. அவன் பூமியைச் சுற்றி வரும்போது, அதைத் தேடிப்பார்த்த போதும் அவர்களால் அதைக் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை. அவன் தான் சுற்றி வரும் கோள்வீதி தான் தூள் தூளாகிவிட்டதோ என்று எண்ணினான். ஆனால் அது அவ்வாறில்லை. அவனது கோள்வீதி சரியாகத்தான் இருந்தது. விளக்குகள்... 75என்ன ஏற்பட்டது என்பதைக் கவனியுங்கள். பறக்கும் தட்டுகளைப் பற்றி ரேடியோவிலும், நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், தொலை காட்சியிலும் அதைக் குறித்து பார்த்திருக்கிறீர்கள்; செய்தித் தாள்களிலும் வந்துள்ளது. எங்கிலும் அது தோன்றியுள்ளது. பெண்டகன் ஆறு வாரங்களுக்கு முன்னர், அதைப் பற்றி அறிக்கை வெளியிட்டது; அது ஒன்றும் எட்டுக் கட்டிய கற்பனைக் கதை அல்ல. (பெண்டகன் என்பது அமெரிக்க நாட்டின் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த (இராணுவ) அலுவலகங்கள் அமைந்த ஐந்து பக்கமுள்ள (ஐங்கோண வடிவிலான) கட்டிடம் - ஆகும் - அமெரிக்க இராணுவைத் தலைமைப் பீட அலுவலகம் -தமிழாக்கியோன்) அவர்கள் தொலைக்காட்சியில் எவ்விதமாக பறக்கும் தட்டுகள் பெண்டகனுக்கு மேலே புலனாய்வு விளக்குகளோடு பறந்தபடியே தொங்கிக் கொண்டிருந்ததை படம் பிடித்தோம் என்பதைக் காண்பித்தார்கள். வாஷிங்டன் டி.சி. முழுவதிலும் அது காணப்பட்டது. அது ராடாரிலே தெரிந்தது, அதை அருகில் போய் பார்க்க பைலட்டுகளை அனுப்பினார்கள், அவர்கள் அவைகளை சுற்றி சூழ்ந்து நெருங்கி வளைக்கப் பார்த்தார்கள். அப்போது, அவைகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கடந்து சென்றுவிட்டன. அதில் காணப்பட்ட அறிவுத்திறன், விவேகம் - அது எப்படிப்பட்டது. பயப்படத் தக்கதான அடையாளங்கள், காட்சிகள் வானங்களிலே காணப்படும், என்றும், மனிதருடைய இருதயங்கள் பயத்தினாலே சோர்ந்து போகும் என்று இயேசு கூறினார்; ஜனங்களுக்கு மத்தியில் இடுக்கண் உண்டாகும். தத்தளிப்பின் காலங்கள் உண்டாகும்., என்று இயேசு கூறினார். (லூக்கா 21:25, 26). இப்பொழுது இது வித்தின் காலம் என்பதை நீங்கள் காணவில்லையா? அறுப்பின் நேரத்தில் வந்து நிறைவேற வேண்டியவைகளைப் பற்றி வேதாகமம் கூறியுள்ளதை நீங்கள் காணவில்லையா? விதைக்கப்பட்ட அவ்வித்தானது, ஜீவனையடைந்து, ஜீவிக்கிறதை நீங்கள் காணவில்லையா? அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. 76இன்னும் ஒரு விஷயம், கவனித்துக் கேளுங்கள்; இப்பொழுது மிகவும் கவனமாகக் கேளுங்கள். இப்பொழுது காணத் தவறாதீர்கள். இயேசுவின் முதலாம் வருகைக்கு முன்னர், இந்தியாவின் வான சாஸ்திரிகள், வானவியல் வல்லுனர்கள்... நான் இந்தியாவுக்கு மிஷனரியாகச் சென்றிருக்கிறேன். வானவியல் நிபுணர்களாகிய சாஸ்திரிகளிடம் இதைக் குறித்து பேசியிருக்கிறேன். அவர்கள் கண்காணித்துக் கொண்டேயிருந்தனர். அவர்கள் வானவியல் நிபுணர்கள். அவர்கள் விண்கோள்களை ஆராய்ந்துக் கொண்டே இருந்தார்கள். தேவன் பூமியில் செய்யப் போகும் எந்த ஒரு காரியத்தையும் அதைச் செய்யுமுன்னர், தன்னுடைய செயலை முன்கூட்டியே விண்கோள்கள், விண்மீன்கள் மூலமாக அறிவிக்கிறார் என்று அவர்கள் கூறினர். ஏன் இந்த மூன்று சாஸ்திரிகள் பூமியை அரசாளப் போகிற இந்த ராஜாவை குழந்தை ராஜாவை, தொழுது கொள்ளச் சென்றபோது, அவர்கள் ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றார்கள் என்று உங்களுடைய வேதம் கூறுகிறதே என்றனர். ஆனால், வெளிப்படையாகக் கூறினால் மூன்று நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து இந்த ஒரு நட்சத்திரத்தை உண்டாக்கினதாக அவர் மேலும் கூறினார். அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். நான் பேசிக் கொண்டிருந்த கிறிஸ்தவ வானசாஸ்திரி அல்லது வானவியல் நிபுணர், ''அதன் அர்த்தம் என்னவெனில், பூமியில் மூன்று இன மக்களே உள்ளனர், அவர்களுக்காகத்தான் இம்மனிதர் மரித்தார். அம்மூன்று இன மக்கள் காம்,சேம், யாப்பேத் என்பவர்களின் சந்ததியினர்தான். அவரது சுவிசேஷமானது, காம், சேம், யாப்பேத் என்பவர்களுடைய சந்ததியினருக்கு பிரசங்கிக்கப்படும் போது, அவரது சுவிசேஷத்தில் அவர்கள் ஒன்று கூடுகின்றனர். அப்போது, அவர்கள் திரும்பி வருவார்கள்“ என்றார். அவர் அவ்விதமாக விசுவாசிக்க விரும்பினால், அது சரிதான், அப்படியே செய்து கொள்ளட்டும். மூன்று என்ற எண் பரிபூரணத்தைக் குறிக்கும். அந்த மூன்று என்பது எதைக் குறிக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்? நாம் அதைப் பற்றி எவ்விதமாக விசுவாசிக்கிறோம்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய தேவனுடைய திரித்துவமானது, பரிபூரணத்தைக் குறிக்கும் மூன்று என்பதாக இருக்கிறது, அது, மனிதனாகிய இயேசு கிறிஸ்துவிலே பரிபூரணமான அந்த ஒரு மனிதனிலே பிரத்தியட்சமானது. மற்றெல்லா மனிதர்களும் வீழ்ச்சியடைந்தார்கள். யாவரும் மரித்தனர். ஆனால் இங்கோ, ஒரு மனிதன் வருகிறார்; அவர் மரிக்க முடியாதவர்; பரிபூரணமானவர், மரணம் கூட அவரைக் கொல்ல முடியவில்லை; அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார். 77மூன்று என்ற எண் பரிபூரணத்தைக் குறிக்கும் எண்ணாகும். நாம் யாவரும் அதை அறிவோம். மூன்று என்ற எண், அவரது எண் இயலிலே, தேவனுடைய எண்ணாக இருக்கிறது. தேவன் தமது எண்களினால் அறியப்படுகிறார். மூன்று என்ற எண் பரிபூரணத்தைக் குறிக்கும், ஏழு என்ற எண் தொழுதுகொள்ளுதலைக் குறிக்கும்; இருபத்தி நான்கு என்பது தொழுது கொள்ளுதலைக் குறிக்கும். நாற்பது என்ற எண் சோதனையைக் குறிக்கும். ஐம்பது பெந்தேகோஸ்தே, ஜூபிலி ஆகியவைகளைக் குறிக்கும். அவருடைய எண்கள் யாவும், தேவனுடைய எண்களெல்லாம், பரிபூரணமானவையாக உள்ளன. மூன்று என்ற எண்ணானது பரிபூரணத்தைக் குறிக்கும். இப்பொது மிகவும் கவனமாக செவி கொடுங்கள். சிறு குழந்தையாக கிறிஸ்து பிறந்த போது, அதற்கு முன்பாக, மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து அவ்விடிவெள்ளி நட்சத்திரத்தை உருவாக்கி, பரிபூரணரான குழந்தையாகிய கிறிஸ்துவின் வருகையை பிரகாசித்துக் காண்பித்தது. 78இப்பொழுது, என்ன சம்பவித்தது? நாம் ஒரு முழக்கத்தை, செய்தித்தாளில், தேசாதேசங்களிலே தொலைக்காட்சிகளிலே, காண்கிறோம்; எதைப் பற்றியென்றால், பூமியோடு, ஐந்து நட்சத்திரங்கள் ஓர் அணியில் வந்து சேருகின்றன என்பது தான் அது. ஐந்து என்ற எண் என்ன? கிருபையின் ஒரு எண்ணாகும் அது. அந்நட்சத்திரங்கள் தோன்றும் ஒவ்வொரு சமயமும், பூமியின் மேல் ஏதாவது ஒன்று சம்பவிக்கிறது. என்ன நடந்துவிட்டது? ஐந்து நட்சத்திரங்கள் ஓரணியில் ஒன்று திரண்டனர். அது என்னவாயிருக்கிறது, எதைக் குறித்து அறிவிக்கிறது? அது முதற்கொண்டு என்ன சம்பவித்திருக்கிறது என்பதைக் கவனியுங்கள். ஜெர்மானிய தேசம் உலகப் படத்தில் இருந்து ஏறத்தாழ துடைத்து அப்புறப்படுத்தப்பட்டது போல் ஆகிவிட்டது. வானசாஸ்திரி ஒருவர், தர்பூசணிப்பழத்தைப் போல, பூமியானது வெடித்து சிதறும் என்று கூறினார். கடைசி நாட்களிலே இடுக்கணான அனைத்து காரியங்களும் சம்பவிக்கப் போகிறதைக் குறித்து அவர்கள் முன்னுரைத்துள்ளனர். என்ன சம்பவித்துள்ளது என்பதை கவனித்துப் பாருங்கள். இங்கிலாந்து தேசத்திலே, அன்றொரு நாளிலே, ஏற்பட்ட புயலாலே, எழுபதினாயிரம் வீடுகள் அழிந்து அடித்துக் கொண்டு போகப்பட்டது. எங்கும் பேரழிவுகள். கலிபோர்னியா, லாஸ் ஏஞ்ஜெல்ஸ் சமுத்திரத்திற்குள் மூழ்கடிக்கப்படப் போகிறது. அது என்னவாயிருக்கிறது? ஐந்து நட்சத்திரங்கள் ஓரணியில் வருகிறது. கிருபை, தேவனுடைய கிருபை. என்ன சம்பவித்துள்ளது? ஒரு குழந்தையான சபை அல்லேலுயா! ஒரு மணவாட்டி - அதன் குழந்தைப் பிராயத்தில் உள்ளது. தேவனுடைய வல்லமையானது அவள் மேல் பொழிய ஆரம்பித்துள்ளது. அவள் உருவாகிக் கொண்டு வருகிறாள். இந்த மணவாளனுக்காகவே உள்ள ஒரு மணவாட்டி அவள். அப்பரம பிதாவின் பரிபூரணத்துவத்தை காண்பிக்கும் முகமாக, மூன்று நட்சத்திரங்கள் அப்போது தோன்றின; மூன்றும் பூமியில் நம் மத்தியில் ஒன்றாக ஆனது, தேவனுடைய உத்தியோகங்கள், ஒரு உத்தியோகமாக ஆகியது. இப்போது என்ன சம்பவித்துள்ளது? ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, தேவனுடைய வார்த்தையின் கீழாக ஒன்று கூடி வருகிறதைக் காண்பிக்கிறது. அவள் வருகிறதை வானவியல் வானமானது பிரகடனம் செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் விசுவாசிக்காதிருக்கக் கூடும். ஆனால் அது வார்த்தையாயிருக்கிறது, ஆம் ஐயா. 79என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது? நான் முடிக்கப் போகிறேன். நான் இதைக் கூறலாம்; சிநேகிதரே, சபையானது வந்து கொண்டிருக்கிறது. தேவன் கறை, திரை ஒன்றுமில்லாத ஒரு சபையைப் பெற்றுக் கொள்ளப் போகிறார். அவள் முன்குறிக்கப்பட்டவள். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அவர் அதை உடையவராக இருப்பார். அதைச் சரியாக அப்படியே ஆக்குகிறது. யார் அதில் அங்கமாயுள்ளனர்? எனக்குத் தெரியாது. நான் அதில் ஒருவனாக இருக்கிறதாக நம்புகிறேன். ஆனால், கறை, திரை ஒன்றுமில்லாத ஒரு சரீரத்தை உடையவராக இருப்பார். கிறிஸ்து தமது மணவாட்டிக்காக வர ஆயத்தமாயுள்ளார் என்பதை, இக்கடைசி கால அடையாளங்களும், இன்ன பிற காரியங்களும் வெளிப்படையாக காண்பித்துக் கொண்டிருக்கின்றன. அது தேவன் தமது வார்த்தையில் இருந்து ஒரு மனிதனிலே ஒரு பரிபூரண மனிதனிலே பிரத்தியட்சமாகுதலாகும். தேவனும் அவரது வார்த்தையும் மீண்டும் ஒன்றாக ஆகி ஒரு மணவாட்டியிலே அவர் பிரத்தியட்சப்படுதல் உண்டாகிறது. ஏவாள் வார்த்தையோடு ஏதோ ஒன்றை இனக்கலப்படம் செய்தது போல் அல்ல, ஆனால் சபைக்குள்ளாக கலப்படமில்லாத சுத்தமான வார்த்தையானது பிறந்து, இயேசுகிறிஸ்து நின்றது போலவே அவளும் அவருடைய வார்த்தை அவருடைய ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட பிரகாரமாக, நின்றிடுவாள். அதைப் பற்றிய பிரகடனம் இப்பொழுது செய்யப்படுகிறது என்று நம்புகிறேன். 80தீர்க்கதரிசி,... “ஒருநாள் உண்டு , அது பகலுமல்ல, இரவுமல்ல, ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்'' (சகரியா 14:7) என்று கூறுகிறார். வேதாகமத்தை படித்திருக்கிற நீங்கள் யாவரும் அதை அறிவீர்கள். என்ன சம்பவிக்கிறது? நாகரிகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கிறது. சீனாதான் பழங்காலத்தில் நாகரிகத்தில் சிறந்து விளங்கியது. நாகரிகம் கிழக்கில் ஏற்பட்டு, சூரியனோடு பயணித்து, மேற்கு நோக்கி சென்றது. அது இப்போது எங்கே இருக்கிறது? மேற்குக் கடற்கரையிலே. அது மேற்கொண்டும், மேற்கிலேயே சென்று கொண்டிருந்தால் மீண்டும் கிழக்குக்கே திரும்பி வந்துவிடும். நான் கூறுவதை புரிந்து கொண்டீர்களா? கிழக்கிலே உதிக்கிற அதே சூரியன் தான், மேற்கிலும் போய் அஸ்தமனம் ஆகிறது. அதே SUN (சூரியன்). அதே SON குமாரன் தான். தேவனுடைய குமாரன் (SON OF GOD) கிழக்கத்திய மக்களிலிருந்து ஒரு மணவாட்டியைத் தெரிந்து கொள்ள பூமிக்கு வந்தார், ஆனால் அம்மணவாட்டியோ ஏவாளைப் போல, யெகோவாவின் மணவாட்டி செய்தது போலவே தன்னை கறைப்படுத்திக் கொண்டாள். அங்கே பிரகாசித்த அதே குமாரன் (SON) பெந்தேகோஸ்தேயிலே, அவர் விதைத்த விதையின்மேல் அது முதிர்ச்சி அடையும்படி அங்கே பிரகாசித்த அவரே, அதே குமாரன் இப்பொழுது, மேற்கத்திய பிராந்தியத்திலே, பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். எதற்காக? ஒரு மணவாட்டியை பிறப்பிப்பதற்காக விதைக்கப்பட்ட விதையை முதிர்ச்சியடையச் செய்வதற்காக பிரகாசிக்கிறார். சுவிசேஷத்தின் சாயங்கால வெளிச்சம், கர்த்தராகிய இயேசுவுக்கு ஒரு மணவாட்டியைக் கொண்டு வரும் ஆமென். அங்கே சில நூற்றுக்கணக்கில் சாயங்கால வித்தின் அடையாளங்கள் உள்ளன. 81நமக்கு முடிக்கும் முன்னர் இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன. நீங்கள் அவைகளில் ஒன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் அவ்வித்துக்கள் ஒன்றில் உள்ளதாக விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய இருதயமானது, கலப்பிடமில்லாத சுவிசேஷத்தினாலே விதைக்கப்பட்டுள்ளது என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய இருதயத்தை விட்டு, எந்த ஒன்றினாலும் தேவனுடைய வார்த்தையை அகலச் செய்ய இயலாது என்று விசுவாசிக்கிறீர்களா? அவ்வாறில்லாவிடில், எனது சிநேகிதரே, நான் ஒருவேளை மீண்டும் உங்களை இப்பூமியின் மேல் இனி ஒருபோதும் காணாமல் இருக்கக் கூடும்; ஆனால் கர்த்தருடைய வார்த்தையை ஞாபகத்தில் வைத்திடுங்கள்: கர்த்தருடைய இரகசியமானது அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு தெரியப்படுத்தப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவருடைய தீர்க்கதரிசிகள் அதைக் குறித்துப் பேசினர். இங்கே இந்த இடத்திலேயே இப்போது அது இருக்கிறது. அது வந்து நிறைவேறியுள்ளதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் என்ன கூறினார்களோ, அதை உங்களுக்கு எச்சரிக்கையாக நான் மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறேன். உங்களிடத்தில் அவ்வித்துக்கள் இல்லாவிடில், இந்த இரவிலே, நீங்கள் கிறிஸ்தவர் அல்லாதவராக இருக்கிறீர்களென்றால், ஒருவேளை நீங்கள் ஒரு சபையைச் சேர்ந்தவராக இருக்கலாம். சகோதரரே அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்ளாதீர்; அவைகளுக்கு செவி கொடுக்க வேண்டாம்; அது இனக்கலப்படமான விஷயம். இயேசு கிறிஸ்துவில் தேவனுடைய வார்த்தை ஒப்புயர்வற்ற விதமாக வாசம் செய்தது போலவே, உங்களிலும் வாசம் செய்தாக வேண்டும். ஏனெனில் அவர் தலையாயிருக்கிறார். அவரது சரீரம் ஒன்றாகவும், அவரது தலை வேறொன்றாகவும் இருக்க முடியாது. இரண்டுமே வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும். உங்களுடைய சபையானது மதக்கோட்பாடுகளும், தத்துவங்களும் மாத்திரம் உங்களுக்கு அளிக்கிறதென்றால், அது வேத வாக்கியங்களின்படியானதல்ல. அதை விசுவாசிக்காதீர்கள். ஒரு சபையில் நீங்கள் இணைந்து கொள்ள முடியாது; ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையினால் ஒரு சரீரத்திற்குள்ளாக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். 82நீங்கள் ஒரு உணவுவிடுதிக்குச் சென்று, அங்கு ஒரு கோப்பை சூப் விலைக்கு வாங்குகையில், அதில் ஒரு சிலந்தி காணப்பட்டால் நீங்கள் உணவு விடுதியினர் மேல் வழக்குத் தொடருவீர்கள். நீங்கள் பருகினால், அதினால் உங்களுடைய சரீரத்தை அது அழித்துவிடும் என்று நீங்கள் அஞ்சுவதினால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை நீங்கள் அருந்தமாட்டீர்கள். சகோதரனே, உங்கள் சரீரத்தை எது அழிக்கும் என்பதைக் குறித்து நீங்கள் அஞ்சத் தேவையில்லை, உங்கள் ஆத்துமாவையும், சரீரத்தையும் ஒருங்கே அழித்து நாகத்தில் தள்ள வல்லவருக்கே பயப்படுங்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தைக் குறித்து அக்கறை கொண்டிருந்தால், அப்போது, உங்களுடைய சரீரத்தை வியாதிப்படவும் பெலவீனப்படவும் செய்யத்தக்கதாக அசுத்தமான எந்த உணவையும் நீங்கள் சாப்பிட மாட்டீர்கள்; அதே போல், சரீரம் அழிந்து போகும்போது, நித்தியமாக இருக்கவேண்டிய ஆத்துமாவுக்கு ஏதாவது ஒரு மதக் கோட்பாட்டை புசிக்க கொடுக்கக் கூடுமோ? பிசாசானவன், அதை உங்கள் தொண்டையில் வைத்துக் திணிக்க இடம் கொடாதீர்கள். நீங்கள் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாக ஆகிறீர்கள். உங்களது ஆவி அப்போது, இங்கே எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையைக் குறித்தும் அவர் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் குறித்து சாட்சியிடுகிறது; அதை உங்களிலே பிரத்தியட்சப்படுத்துவதாக அது கிரியை செய்கிறது. தேவனுடைய ஆவியானவர் வந்து உங்களிலே வாசம் பண்ணுவார். நீங்கள் கிறிஸ்துவின் சரீரமாயிருந்து, பூமியிலே அவருக்கு பிரதிநிதித்துவம் வகிக்கிறவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பெற்றிருக்காவிடில், தெய்வீக சுகமளித்தலுக்காக உங்களால் விசுவாசிக்க இயவில்லையென்றால்... 83நீங்கள் இங்கே வியாதிப்பட்டவர்களாக இருப்பீர்களாயின், தேவன் உங்களுக்கு தெய்வீக சுகமளித்தலை அளிப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், அப்போது, ''...உன் நோய்களையெல்லாம் நீக்கி குணமாக்குகிற கர்த்தர் நானே...“ (சங்கீதம் 103:3, யாத்திராகமம் 15:26) என்ற வசனத்தை முன்வைத்து, ”ஆண்டவரே நான் அதை விசுவாசிக்கிறேன் என்று கூறுங்கள். ஒவ்வொரு வழியையும் திறந்து வையும், இதோ இங்கே நான் இருக்கிறேன்'' என்று கூறுங்கள்; அப்போதும் என்ன சம்பவிக்கிறதென்பதைக் கவனியுங்கள். அன்று மரித்துக் கொண்டிருந்த சிறு பெண்ணுக்கு என்ன சம்பவித்ததோ, அதே போல் இன்னும் அதிகமாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு உலகமெங்கிலும் சம்பவிக்கும்... 84தென் ஆப்பிரிக்காவிலே, ஒரு கூட்ட மக்களுக்காக நான் ஒரு ஜெபத்தை ஏறெடுத்தேன்; அப்போது, ஏழு ட்ரக்குகள் நிறைய கக்க தண்டங்கள் கொண்டு செல்லப்பட்டதை நின்று நான் பார்த்தேன். அவ்விதமான ட்ரக்குகள் இங்கே ஜ்யார்ஜியாவில் கூட இல்லை; ஒவ்வொன்றும் சுமார் ஆறு அல்லது எட்டு சக்கரங்கள் கொண்ட பெரிய ட்ரக்குகள் அவை. அடுத்த நாள் காலையிலே, அந்நகர மேயர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்; ஜன்னலண்டை வந்து, ''சகோதரர் பிரான்ஹாம் அவர்களே, இங்கே வந்து பாருங்கள்'' என்றார். அங்கே கண்ட காட்சியென்னவென்றால், ஏழு ட்ரக்குகள் நிறைய கக்க தண்டங்களும், சக்கரநாற்காலிகளும் கொண்டு செல்லப்பட்டன. அவைகள் முடமான மக்கள் உபயோகித்தவைகள் ஆகும்; அவர்களைத் தொடவேயில்லை; தேவனுடைய வார்த்தையை அவர்களிடம் கொடுக்க மாத்திரம் செய்தேன்; அதை விசுவாசிக்கும்படியாக அவர்களிடம் கூறினேன்; அவ்வாறே அவர்கள் விசுவாசித்தார்கள். முந்தின நாளில் இவைகளை உபயோகித்துக் கொண்டிருந்த மக்கள், குணமடைந்து, சாலையில் நடந்து வந்து, தங்கள் கைகளை தங்கள் நெஞ்சில் வைத்துக் கொண்டு, தங்களுடைய சுய பாஷையிலே, “யாவும் கைகூடும், விசுவாசிப்பாயாக'' என்று பாடிக் கொண்டே சென்றார்கள். அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பினார். நீங்கள் வார்த்தையை அனுப்புவதை மாத்திரம் செய்யுங்கள், சபையானது அதை ஏற்றுக் கொள்ளுகிறது; தேவனால் பிறந்தவனெனும், தேவனை ஏற்றுக் கொள்ளுகிறான், தேவனை விசுவாசிக்கிறான்; நீங்கள் அவரை விசுவாசிக்கின்றீர்களா? நம் தலைகளை வணங்குவோமாக. நான் இக்கைக்குட்டைகளுக்காக ஜெபிப்பேன். 85உங்கள் தலைகளை வணங்கியபடியே, கண்களை மூடிய படியே இருக்கும்போது, நான் உங்களிடம் மிகவும் அக்கறை காட்ட வேண்டிய ஒரு கேள்வியைக் கேட்கப் போகிறேன். நீங்கள் தேவனோடு சரியாக இல்லாவிடில், வேதாகமமானது, தேவனால் ஏவி எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாகும் என்று விசுவாசிக்க முடியாதபடி உங்களைத் தடுக்கக் கூடியதாக ஏதாகிலும் இருக்குமானால், வேதத்தின் பிரமாணங்களின்படியாக இயலும் என்று உங்களால் விசுவாசிக்க இயலாதிருக்கிறதென்றால், உங்கள் கரங்களை உயர்த்தி, ''தேவனே என்னிடம் இரக்கமாயிரும். சகோ. பிரான்ஹாமே, நீங்கள் எனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்; அவ்விதமான கிறிஸ்தவராக நான் இருப்பேன்'' என்று கூறும் அளவிற்காவது இருப்பீர்களா? அப்படியாக நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இளம் பெண்மணியே, உங்களுக்கு நன்றி; உங்களுக்கு நன்றி, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நல்லது; இக்கட்டிடத்தில் அப்படியாக சிந்திக்கிறவர் ஒருவர் உண்டு; அவர்களில் இருவர் அப்படியாக சிந்திக்கிறார்கள். வார்த்தையானது அதை அசைக்க இயலவில்லையெனில், அப்படியாக மெய்ப்பிப்பதற்காக உள்ளவர்களில் உள்ள ஒருவனல்ல நான். அதை விசுவாசிப்பதற்காக நீங்கள் முன்குறிக்கப்பட்டிருந்தால் தான் உங்களால் அதைச் செய்ய முடியும். இயேசு அநேகம் அற்புதங்களைச் செய்திருந்த போதிலும், பரிசேயரால் அதை விசுவாசிக்க முடியவில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அவர்களால் தங்கள் மூளையில் அதை பெற்றுக் கொள்ள முடியவில்லை; ஏனெனில் அதற்கென உள்ளவர்களல்ல அவர்கள். தேவனுடைய வார்த்தையானது உங்கள் மூலமாக கிரியை செய்யவில்லையென்று அறிந்திருக்கும்படியாக உங்கள் இருதயமானது மிகவும் கடினமாயிருந்தால், அப்போது, நீங்கள் தேவனுக்கென்று உங்கள் கரங்களை உயர்த்தி, இரக்கத்திற்காக கெஞ்சமாட்டீர்கள். அப்போது நியாயத்தீர்ப்பின் நாளிலே என்ன செய்யப் போகிறீர்கள்? 86ஜெபத்தில் நினைத்துக் கொள்ளும்படியாக விரும்புகிறதான வியாதிப்பட்டவர்கள் எவராவது இங்கே உண்டா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். மூன்று, அல்லது, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, சுமார் பத்து நபர்கள். நல்லது; நாம் நமது தலைகளை வணங்குவோமாக. நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி, தன் கரத்தினை உயர்த்திய பின்னால் உள்ள சிறிய சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, உங்களது மென்மையான இதயத்தை ஆசீர்வதிப்பார். இன்று இரவிலே தேவனுடைய வார்த்தையானது உங்களது எளிய இருதயத்திலே வேரூன்றுவதாக. நீங்கள் கிறிஸ்துவுக்கு மிஷனரியாக ஆகிறீர்கள். சிறிது நேரம் கழித்து தன் கரங்களை உயர்த்திய இந்த சகோதரன், உங்கள் முடி நரைத்துவிட்டது; ஆனால் தன்னோடு தேவன் பேசும் முன்னர் ஆபிரகாம் எழுபத்தைந்து வயதுடையவனாய் இருந்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். வார்த்தையின் வேர்களை இன்றிரவிலே தேவன் தாமே உங்கள் இருதயத்திலே ஊன்றுவாராக. இந்த மகத்தான மழையானது பொழியும்போது, அது வெறும் மதக் கோட்பாடுகளை மாத்திரம் பிறப்பிக்க வேண்டாம்; அதுதானே கிறிஸ்துவை உங்களிலே பிரத்தியட்சப்படுத்தி காட்டுவதாக. 87சுகம் பெறுவதற்காக, தங்கள் கரத்தை உயர்த்திய நீங்கள் ஒவ்வொருவரும், “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், கர்த்தர் அவனை எழுப்புவார்'' என்று வேதாகமம் கூறியிருக்கிறதை அறியுங்கள். (யாக்கோபு 5:15). அவ்வித்தானது உங்கள் இருதயத்தில் இருந்து கொண்டிருந்தால், இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவ்வித்திற்கு நீர் பாய்ச்சிடும்படியாக நான் ஜெபிக்கப் போகிறேன். ஒரு காரியம் நிச்சயமாக சம்பவிக்கும். தேவன் பட்சபாதமுள்ளவரல்ல. அவர் ஒருவரை இரட்சிப்பாரென்றால், விசுவாசிக்கிற மற்றுள்ளவரையும் அவர் இரட்சிப்பார். அவர் ஒருவரை சுகமாக்கினால், மற்றவரையும் சுகமாக்குவார். ஆனால் நீங்கள் விசுவாசித்தாக வேண்டும். நீங்கள் அதை விசுவாசித்தால் நான் இப்போது உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். 88எங்கள் பரம பிதாவே, இங்கேயிருக்கிற இந்த சில கைக்குட்டைகள் மேல் நான் கைகளை வைக்கிறேன். ஒருவருக்கு அன்பாயுள்ள ஒருவர் எங்கோ வியாதிப்பட்டு, துன்பப்பட்டவர்களாக இருக்கக் கூடும். அவர்களுக்கு ஏதோ சரியில்லாமல் இருக்கக்கூடும், ஒருவேளை எங்கோ வியாதிப்பட்ட ஒரு குழந்தையையுடைய ஒரு தாயாக அது இருக்கலாம்; ஒருவேளை ஜியார்ஜியாவில் எங்கோ ஒரு சிறிய மரவீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கண் தெரியாத ஒரு தந்தையாக அது இருக்கலாம்; எங்கோ மருத்துவமனையில் உள்ள ஒருவராக அது இருக்கலாம்; நீர் இவைகளையெல்லாம் அறிந்திருக்கிறீர்; கர்த்தாவே, அவர்களுடைய சுகமளித்தலை ஏற்கனவே கிரயத்திற்கு கொண்டிருக்கிற கிறிஸ்து நீரே என்ற இந்த ஒரு காரியத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஜெபத்தின் மூலம் நான் உமது வார்த்தையை அனுப்புகிறேன் கர்த்தாவே, நீர் உமது வார்த்தையை அனுப்பியிருக்கிறீர். ''தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்...'' என்று உம்மிடத்தில் வந்த அந்த ஸ்திரீ வேண்டினாள். (மத்தேயு 15:22) அவள் புறஜாதியான ஸ்திரியானபடியினாலே, நீர் அவளுக்கு தாவீதின் குமாரன் அல்ல... பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல...'' (மத். 15:26) என்று நீர் கூறினீர். “...அதற்கு அவள், மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க் குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்'' (மத். 15; 27). நீ இவ்விதமாகக் கூறின படியால் உன் மகள் உயிர்பிழைப்பாள் என்ற நீர் கூறினர். அவள் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற போது, உம்முடைய வார்த்தை ஏற்கனவே அங்கே சென்றுவிட்டிருந்தது, அப்பெண்ணை அது குணமாக்கியிருந்தது என்பதை நாங்கள் காண்கிறோம். 89ஒரு தடவை ஒரு தகப்பனார், தன் குழந்தைக்காக அது குணமான வேளை இன்னது என்று விசாரித்தான். பதினோராம் வேளை ஜூரம் அவளை விட்டகன்றது என்று கூறப்பட்டது. நீர் உம்முடைய வார்த்தையை அனுப்பினீர். கர்த்தாவே உம்முடைய வார்த்தையை விசுவாச ஜெபத்தோடு நான் அதை தன் கரத்தை உயர்த்திட்ட அச்சிறு பெண்ணிடமாக அனுப்புகிறேன். தன் கரத்தினை உயர்த்திய அம்மனிதனிடமாக அதை அனுப்புகிறேன். இரட்சிப்புக்காக இன்றிரவில் அது கிரியை செய்வதாக. அதை அளித்தருளும், கர்த்தாவே, ''...என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு...'' என்று நீர் கூறினீர். (யோவான்5:24) இப்போதும் கர்த்தாவே, அது உம்முடைய வார்த்தையாயிருக்கிறது. நீர் அவ்விதமாகக் கூறினீர். விஞ்ஞானத்தின் பிரகாரமாக, அவர்கள் ஒவ்வொரு விதியையும் மீறுகிறார்கள். உங்கள் கரத்தை நீங்கள் உயர்த்த முடியாது என்று விஞ்ஞானம் கூறுகிறது. புவிஈர்ப்புவிசை அதைக் கீழே இறக்கிவிடுகிறது. ஆனால் மனிதனிலே ஒரு ஆவி உண்டு. விஞ்ஞானத்தின் விதிகளை மீறத்தக்கதாக மனிதனை ஒரு ஆவி ஆண்டு கொண்டிருக்கிறபடியினால், அவனால் ஒரு தீர்மானம் எடுத்து, அதற்காக தன் கரத்தை உயர்த்தமுடியும். இப்போதும், தேவன் பேசினார். அவர்கள் தங்கள் கரங்களை தங்களுடைய சிருஷ்டிகரை நோக்கி உயர்த்தியிருக்கிறார்கள். பரம பிதாவே, இப்போதே, அவர்களுடைய இருதயங்களிலே அவர்களுடைய கருப்பையாகிய அவர்களுடைய இருதயங்களிலே உம்முடைய வார்த்தையானது விதைக்கப்பட்டு, அவர்களாலே, கிறிஸ்துவின் மணவாட்டி பிறப்பிக்கப்படட்டும், பிதாவே. 90இங்கே இக்கட்டிடத்தில், தங்களுடைய கரங்களை உயர்த்தின வியாதிப்பட்டவர்களுக்காக வேண்டுகிறேன்; அவர்களுக்கு தேவையுள்ளபடியால், அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர். நீர் சுகமளிக்கிறவர் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். நான் இப்போதும், இந்த விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கிறேன். நான் அதை அனுப்புகிறேன், கர்த்தாவே. இப்போதே, அந்த விசுவாசமானது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஒவ்வொரு இருதயத்திலும் இறங்கட்டும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுகமளித்தலை அது கொண்டு வருகிறவரையிலும், தேவனுடைய வார்த்தையானது அங்கே மிகவும் அழுத்தம் திருத்தமாக ஓங்கியிருக்கட்டும். பிதாவே, அதை அளித்தருளும். இப்போது, மீண்டும் நான் இங்கே வைக்கப்பட்டுள்ள இந்த கைக்குட்டைகளுக்காகவும், இத்துணிகளுக்காகவும் இதைக் கூறுகிறேன். பவுலுடைய சரீரத்தின் மேல் கைக்குட்டைகளையும், துணிகளையும் அவர்கள் போட்டு அவைகளை எடுத்துக் கொண்டுபோய், அசுத்த ஆவிகளை உடைய மக்களின் மேல் போட்டார்கள் என்றும், அவர்கள் குணமாகினார்கள் என்றும் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இப்போதும், நாங்கள் பரிசுத்த பவுல் அல்ல. ஆனால் அக்காரியங்களை செய்தது அவன் அல்ல, ஏனெனில் அவனுக்குள் வார்த்தை இருந்தபடியினால் இவைகள் நடந்தன. நீர் இன்னமும் அதே வார்த்தையாகவே இருக்கிறீர். 91இப்போதும், பிதாவே, ஒருசமயம், இஸ்ரவேல் வாக்குத்தத்த தேசத்தைவிட்டு புறம்பாக்கப்பட்டிருந்தது. அவர்கள் உம்முடைய மணவாட்டியாயிருந்தார்கள். வாக்குத்தத்த தேசத்திற்குப் போகும் பாதையில் அவர்களை நீர் நடத்தினீர். ஒரு வழியை அவளுக்காக நீர் ஆயத்தம் பண்ணினீர். சத்துரு வழியில் எதிர் கொண்டான். நீர் கோபங் கொண்ட கண்களுடன் அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக நோக்கிப் பார்த்தீர். சமுத்திரம் பயந்து நடுங்கினது. அது பின்னிட்டுத் திரும்பினது. இஸ்ரவேல் முன்னேறிச் சென்றது. இப்போது, தேவனே அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் நோக்காதேயும், ஆனால் உமது குமாரனுடைய இரத்தத்தின் மூலமாக நோக்கியருளும். அவரே இந்த நோக்கித்திற்காக மரித்தவராயிருக்கிறார். நான் உம்முடைய வார்த்தையை அனுப்புகிறேன். பிசாசு நடுங்கட்டும். அவன் அகன்று போகட்டும். இஸ்ரவேலரைப் போல, இம்மக்கள் தோல்வியடையாமல், தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு வந்தடையட்டும்... நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்'' (3 யோவான் 2-ம் வசனம்) என்ற மகத்தான வாக்குத்தத்தத்திற்கு வந்து சேரட்டும். அதை அளித்தருளும் கர்த்தாவே, உம்முடைய வார்த்தை வெறுமையாக உம்மிடத்தில் திரும்பாது என்று கூறும்படி, நாங்கள் அதை எங்கே அனுப்புகிறோமோ அங்கே அது கிரியை நடப்பிப்பதாக. அது அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். (ஏசாயா 55:11). இம்மக்களுக்காக, இவ்விசுவாச ஜெபத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏறெடுக்கிறேன். 92உங்களுடைய தலைகளை நீங்கள் வணங்கியிருக்கையில் உங்களில் எத்தனை பேர்கள், உரைக்கப்பட்டவைகளை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? எத்தனை பேர்கள் தேவனுடைய வார்த்தை உங்களிடத்திற்கு வந்தது என்ற விசுவாசிக்கப் போகிறீர்கள்? எத்தனை பேர்கள் அதை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? கரங்களை உயர்த்தினவர்களே! நீங்கள் எதற்காக உயர்த்தியிருந்தாலும் சரி, நீங்கள் கரத்தை உயர்த்தி, ''நான் விசுவாசிக்கிறேன், இப்போதே நான் அதை ஏற்றுக் கொள்கிறேன், நான் வேண்டிக் கொண்டதை பெற்றுக் கொண்டேன் என்று விசுவாசிக்கிறேன் என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது அற்புதமாயுள்ளது. அது அருமையாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தையானது உங்களில் வேரூன்றுகிறது என்று நான் நம்புகிறேன். 93இப்போதும், உங்கள் தலைகளை வணங்கியிருக்கிறபோது, உங்களுக்கு ஒரு மேய்ப்பருண்டு, அவர் ஒரு இனிமையான சகோதரர், அவர் இங்கே வந்து சற்று நேரத்திற்கு முன்னால், அவர் செய்தது போல, மேற்கோள்காட்டிக் கூறினாரே அதேபோல் செய்ய விரும்புகிறேன். சுவிசேஷகர்கள், கூட்டத்திலே எல்லாவற்றையும் செய்யக் கூடாது. இந்த தேவ மனிதனாகிய உங்களுடைய மேய்ப்பரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவைகளுக்காக, இங்கே தங்கள் கரங்களை உயர்த்தின மக்களை இந்த அருமையான மேய்ப்பரிடம் கொண்டு வந்து ஒப்படைக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். தேவனுடைய ஆழமான அனுபவங்களிலே உங்களுடைய சுகமளித்தலுக்காகவும், இரட்சிப்புக்காகவும் அவர் உங்களை வழிநடத்துவாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, மேய்ப்பரே.